Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 4

At-Tawbah

(at-Tawbah)

௩௧

اِتَّخَذُوْٓا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَۚ وَمَآ اُمِرُوْٓا اِلَّا لِيَعْبُدُوْٓا اِلٰهًا وَّاحِدًاۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ ٣١

ittakhadhū
ٱتَّخَذُوٓا۟
எடுத்துக் கொண்டனர்
aḥbārahum
أَحْبَارَهُمْ
அறிஞர்களை தங்கள்
waruh'bānahum
وَرُهْبَٰنَهُمْ
இன்னும் துறவிகளை/தங்கள்
arbāban
أَرْبَابًا
(வணங்கப்படும்) கடவுள்களாக
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
wal-masīḥa
وَٱلْمَسِيحَ
இன்னும் மஸீஹை
ib'na
ٱبْنَ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
wamā umirū
وَمَآ أُمِرُوٓا۟
அவர்கள் ஏவப்படவில்லை
illā
إِلَّا
தவிர
liyaʿbudū
لِيَعْبُدُوٓا۟
அவர்கள் வணங்குவதற்கு
ilāhan
إِلَٰهًا
வணக்கத்திற்குரிய ஒரு கடவுளை
wāḥidan
وَٰحِدًاۖ
ஒரே
لَّآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணங்கப்படும் கடவுள்
illā huwa
إِلَّا هُوَۚ
அவனைத் தவிர
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மிகத் தூயவன்
ʿammā
عَمَّا
எதைவிட்டு
yush'rikūna
يُشْرِكُونَ
இணைவைப்பார்கள்
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௧)
Tafseer
௩௨

يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَيَأْبَى اللّٰهُ اِلَّآ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ٣٢

yurīdūna
يُرِيدُونَ
நாடுகின்றனர்
an yuṭ'fiū
أَن يُطْفِـُٔوا۟
அவர்கள் அணைப்பதற்கு
nūra
نُورَ
ஒளியை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْ
தங்கள் வாய்களைக் கொண்டு
wayabā
وَيَأْبَى
மறுக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā
إِلَّآ
தவிர
an yutimma
أَن يُتِمَّ
(அவன்) முழுமைப்படுத்துவதை
nūrahu
نُورَهُۥ
தன் ஒளியை
walaw kariha
وَلَوْ كَرِهَ
அவர்(கள்) வெறுத்தாலும்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைபடுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௨)
Tafseer
௩௩

هُوَ الَّذِيْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ٣٣

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِىٓ
எவன்
arsala
أَرْسَلَ
அனுப்பினான்
rasūlahu
رَسُولَهُۥ
தன் தூதரை
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழியைக் கொண்டு
wadīni
وَدِينِ
இன்னும் மார்க்கம்
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மை
liyuẓ'hirahu
لِيُظْهِرَهُۥ
அவன் ஓங்க வைப்பதற்காக/அதை
ʿalā l-dīni kullihi
عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ
எல்லா மார்க்கங்களை பார்க்கிலும்
walaw kariha
وَلَوْ كَرِهَ
அவர்(கள்) வெறுத்தாலும்
l-mush'rikūna
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
அவன்தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதனை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௩)
Tafseer
௩௪

۞ يٰٓاَيُّهَا الَّذِينَ اٰمَنُوْٓا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗوَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِيْ سَبِيْلِ اللّٰهِ ۙفَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ ٣٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
inna
إِنَّ
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
அதிகமானோர்
mina
مِّنَ
இருந்து
l-aḥbāri wal-ruh'bāni
ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ
யூத, கிறித்துவ அறிஞர்கள்/இன்னும் துறவிகள்
layakulūna
لَيَأْكُلُونَ
புசிக்கின்றனர், அனுபவிக்கின்றனர்
amwāla
أَمْوَٰلَ
செல்வங்களை
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
தவறாக
wayaṣuddūna
وَيَصُدُّونَ
இன்னும் தடுக்கின்றனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yaknizūna
يَكْنِزُونَ
சேமிக்கின்றனர்
l-dhahaba
ٱلذَّهَبَ
தங்கத்தை
wal-fiḍata
وَٱلْفِضَّةَ
இன்னும் வெள்ளியை
walā yunfiqūnahā
وَلَا يُنفِقُونَهَا
தர்மம் செய்யமாட்டார்கள்/அவற்றை
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fabashir'hum
فَبَشِّرْهُم
நற்செய்தி கூறுவீராக அவர்களுக்கு
biʿadhābin
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
alīmin
أَلِيمٍ
துன்புறுத்தக் கூடியது
நம்பிக்கையாளர்களே! (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பலர் மக்களின் பொருள்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௪)
Tafseer
௩௫

يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِيْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْۗ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ٣٥

yawma
يَوْمَ
நாளில்
yuḥ'mā
يُحْمَىٰ
பழுக்கக்காய்ச்சப்படும்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
fī nāri
فِى نَارِ
நெருப்பில்
jahannama
جَهَنَّمَ
நரகம்
fatuk'wā
فَتُكْوَىٰ
சூடிடப்படும்
bihā
بِهَا
அவற்றைக் கொண்டு
jibāhuhum
جِبَاهُهُمْ
நெற்றிகள்/அவர்களுடைய
wajunūbuhum
وَجُنُوبُهُمْ
இன்னும் விலாக்கள்/அவர்களுடைய
waẓuhūruhum
وَظُهُورُهُمْۖ
இன்னும் முதுகுகள்/அவர்களுடைய
hādhā
هَٰذَا
இவை
mā kanaztum
مَا كَنَزْتُمْ
எவை/சேமித்தீர்கள்
li-anfusikum
لِأَنفُسِكُمْ
உங்களுக்காக
fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
mā kuntum
مَا كُنتُمْ
எவற்றை/இருந்தீர்கள்
taknizūna
تَكْنِزُونَ
சேமிப்பீர்கள்
(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு "உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைகள்தான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும் நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௫)
Tafseer
௩௬

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِيْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَآ اَرْبَعَةٌ حُرُمٌ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ ەۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَاۤفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَاۤفَّةً ۗوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ ٣٦

inna
إِنَّ
நிச்சயமாக
ʿiddata
عِدَّةَ
எண்ணிக்கை
l-shuhūri
ٱلشُّهُورِ
மாதங்களின்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ith'nā ʿashara
ٱثْنَا عَشَرَ
பனிரெண்டு
shahran
شَهْرًا
மாதங்களாகும்
fī kitābi
فِى كِتَٰبِ
புத்தகத்தில், விதியில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yawma
يَوْمَ
நாள்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
min'hā
مِنْهَآ
அவற்றில்
arbaʿatun
أَرْبَعَةٌ
நான்கு
ḥurumun
حُرُمٌۚ
புனிதமானவை
dhālika l-dīnu
ذَٰلِكَ ٱلدِّينُ
இது/மார்க்கம்
l-qayimu
ٱلْقَيِّمُۚ
நேரானது
falā taẓlimū
فَلَا تَظْلِمُوا۟
ஆகவே அநீதி இழைக்காதீர்கள்
fīhinna
فِيهِنَّ
அவற்றில்
anfusakum
أَنفُسَكُمْۚ
உங்களுக்கு
waqātilū
وَقَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
l-mush'rikīna
ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்கள்
kāffatan
كَآفَّةً
ஒன்றிணைந்து
kamā
كَمَا
போன்று
yuqātilūnakum
يُقَٰتِلُونَكُمْ
போர் புரிகின்றனர்/உங்களிடம்
kāffatan
كَآفَّةًۚ
ஒன்றிணைந்து
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
maʿa l-mutaqīna
مَعَ ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுடன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௬)
Tafseer
௩௭

اِنَّمَا النَّسِيْۤءُ زِيَادَةٌ فِى الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِيْنَ كَفَرُوْا يُحِلُّوْنَهٗ عَامًا وَّيُحَرِّمُوْنَهٗ عَامًا لِّيُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَيُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ۗزُيِّنَ لَهُمْ سُوْۤءُ اَعْمَالِهِمْۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ ࣖ ٣٧

innamā l-nasīu
إِنَّمَا ٱلنَّسِىٓءُ
பிற்படுத்துவதெல்லாம்
ziyādatun
زِيَادَةٌ
அதிகப்படுத்துவது
fī l-kuf'ri
فِى ٱلْكُفْرِۖ
நிராகரிப்பில்
yuḍallu
يُضَلُّ
வழி கெடுக்கப்படுகின்றனர்
bihi
بِهِ
இதன் மூலம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
yuḥillūnahu
يُحِلُّونَهُۥ
ஆகுமாக்குகின்றனர்/அதை
ʿāman
عَامًا
ஓர் ஆண்டில்
wayuḥarrimūnahu
وَيُحَرِّمُونَهُۥ
இன்னும் அதைத் தடை செய்கின்றனர்
ʿāman
عَامًا
ஓர் ஆண்டில்
liyuwāṭiū
لِّيُوَاطِـُٔوا۟
அவர்கள் ஒத்து வருவதற்காக
ʿiddata
عِدَّةَ
எண்ணிக்கைக்கு
mā ḥarrama
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fayuḥillū
فَيُحِلُّوا۟
ஆகுமாக்குவார்கள்
mā ḥarrama
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டன
lahum
لَهُمْ
அவர்களுக்கு
sūu
سُوٓءُ
தீய(வை)
aʿmālihim
أَعْمَٰلِهِمْۗ
அவர்களுடைய செயல்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களான
(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றொரு ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௭)
Tafseer
௩௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِيْلَ لَكُمُ انْفِرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَى الْاَرْضِۗ اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْاٰخِرَةِۚ فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا قَلِيْلٌ ٣٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
مَا
என்ன?
lakum
لَكُمْ
உங்களுக்கு
idhā qīla
إِذَا قِيلَ
கூறப்பட்டால்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
infirū
ٱنفِرُوا۟
புறப்படுங்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ithāqaltum
ٱثَّاقَلْتُمْ
சாய்ந்து விட்டீர்கள்
ilā
إِلَى
பக்கம்
l-arḍi
ٱلْأَرْضِۚ
பூமி, உலகம்
araḍītum
أَرَضِيتُم
திருப்தியடைந்தீர்களா
bil-ḥayati
بِٱلْحَيَوٰةِ
வாழ்க்கையைக் கொண்டு
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
mina
مِنَ
விட
l-ākhirati
ٱلْءَاخِرَةِۚ
மறுமை
famā
فَمَا
இல்லை
matāʿu
مَتَٰعُ
இன்பம்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
illā
إِلَّا
தவிர
qalīlun
قَلِيلٌ
அற்பமானதே
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௮)
Tafseer
௩௯

اِلَّا تَنْفِرُوْا يُعَذِّبْكُمْ عَذَابًا اَلِيمًاۙ وَّيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَيْـًٔاۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٣٩

illā tanfirū
إِلَّا تَنفِرُوا۟
நீங்கள் புறப்படாவிட்டால்
yuʿadhib'kum
يُعَذِّبْكُمْ
வேதனை செய்வான்/உங்களை
ʿadhāban
عَذَابًا
வேதனையால்
alīman
أَلِيمًا
துன்புறுத்தக்கூடியது
wayastabdil
وَيَسْتَبْدِلْ
இன்னும் மாற்றி விடுவான்
qawman
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
ghayrakum
غَيْرَكُمْ
உங்களை அன்றி
walā
وَلَا
நீங்கள் தீங்கிழைக்க முடியாது
taḍurrūhu
تَضُرُّوهُ
நீங்கள் தீங்கிழைக்க முடியாது அவனுக்கு
shayan
شَيْـًٔاۗ
எதையும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீதும்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லா விட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (அன்றி, உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௯)
Tafseer
௪௦

اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِيَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَاۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَتَهٗ عَلَيْهِ وَاَيَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰىۗ وَكَلِمَةُ اللّٰهِ هِيَ الْعُلْيَاۗ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ٤٠

illā
إِلَّا
நீங்கள் உதவவில்லையெனில்
tanṣurūhu
تَنصُرُوهُ
நீங்கள் உதவவில்லையெனில் அவருக்கு
faqad
فَقَدْ
உதவிசெய்துவிட்டான்
naṣarahu
نَصَرَهُ
உதவிசெய்துவிட்டான் அவருக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
idh akhrajahu
إِذْ أَخْرَجَهُ
போது/வெளியேற்றினார்(கள்)/அவரை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
thāniya
ثَانِىَ
ஒருவராக
ith'nayni
ٱثْنَيْنِ
இருவரில்
idh
إِذْ
போது
humā
هُمَا
அவ்விருவரும்
fī l-ghāri
فِى ٱلْغَارِ
குகையில்
idh
إِذْ
போது
yaqūlu
يَقُولُ
கூறுகிறார்
liṣāḥibihi
لِصَٰحِبِهِۦ
தன் தோழருக்கு
lā taḥzan
لَا تَحْزَنْ
கவலைப்படாதே
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
maʿanā
مَعَنَاۖ
நம்முடன்
fa-anzala
فَأَنزَلَ
ஆகவே, இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sakīnatahu
سَكِينَتَهُۥ
தன் அமைதியை
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
wa-ayyadahu
وَأَيَّدَهُۥ
இன்னும் பலப்படுத்தினான்/அவரை
bijunūdin
بِجُنُودٍ
படைகளைக்கொண்டு
lam tarawhā
لَّمْ تَرَوْهَا
நீங்கள் பார்க்கவில்லை/அவற்றை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
kalimata
كَلِمَةَ
வார்த்தையை
alladhīna
ٱلَّذِينَ
எவர்களின்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
l-suf'lā
ٱلسُّفْلَىٰۗ
மிகத் தாழ்ந்ததாக
wakalimatu
وَكَلِمَةُ
வார்த்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
hiya
هِىَ
அதுதான்
l-ʿul'yā
ٱلْعُلْيَاۗ
மிக உயர்வானது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்) தான் மிக உயர்வானது. அன்றி, அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௦)
Tafseer