وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٢١
- walā yunfiqūna
- وَلَا يُنفِقُونَ
- தர்மம் புரிய மாட்டார்கள்
- nafaqatan
- نَفَقَةً
- ஒரு தர்மத்தை
- ṣaghīratan
- صَغِيرَةً
- சிறியது
- walā kabīratan
- وَلَا كَبِيرَةً
- இன்னும் பெரியது
- walā yaqṭaʿūna
- وَلَا يَقْطَعُونَ
- அவர்கள் கடக்க மாட்டார்கள்
- wādiyan
- وَادِيًا
- ஒரு பள்ளத்தாக்கை
- illā kutiba
- إِلَّا كُتِبَ
- தவிர/பதியப்பட்டது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- liyajziyahumu
- لِيَجْزِيَهُمُ
- கூலி கொடுப்பதற்காக/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- aḥsana
- أَحْسَنَ
- மிக அழகியதை
- mā
- مَا
- எதை
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கிறார்கள்
அன்றி, இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் செய்த இவைகளைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௧)Tafseer
۞ وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَاۤفَّةًۗ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَاۤىِٕفَةٌ لِّيَتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَلِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْٓا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ ࣖ ١٢٢
- wamā kāna
- وَمَا كَانَ
- சரியல்ல
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
- liyanfirū
- لِيَنفِرُوا۟
- அவர்கள் புறப்படுவது
- kāffatan
- كَآفَّةًۚ
- அனைவருமே
- falawlā nafara
- فَلَوْلَا نَفَرَ
- புறப்பட்டிருக்க வேண்டாமா
- min kulli
- مِن كُلِّ
- இருந்து/ஒவ்வொரு
- fir'qatin min'hum
- فِرْقَةٍ مِّنْهُمْ
- பிரிவு/அவர்களில்
- ṭāifatun
- طَآئِفَةٌ
- ஒரு கூட்டம்
- liyatafaqqahū
- لِّيَتَفَقَّهُوا۟
- அவர்கள் ஞானம் பெறுவதற்காக
- fī l-dīni
- فِى ٱلدِّينِ
- மார்க்கத்தில்
- waliyundhirū
- وَلِيُنذِرُوا۟
- இன்னும் அவர்களை எச்சரிப்பதற்காக
- qawmahum
- قَوْمَهُمْ
- தங்கள் சமுதாயத்தை
- idhā
- إِذَا
- போது
- rajaʿū
- رَجَعُوٓا۟
- திரும்பினார்கள்
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- laʿallahum yaḥdharūna
- لَعَلَّهُمْ يَحْذَرُونَ
- அவர்கள் எச்சரிக்கையாக
(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரைவிட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௨)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِيْنَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوْا فِيْكُمْ غِلْظَةًۗ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ ١٢٣
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- qātilū
- قَٰتِلُوا۟
- போரிடுங்கள்/எவர்கள்
- alladhīna yalūnakum
- ٱلَّذِينَ يَلُونَكُم
- அடுத்திருக்கின்றனர்/உங்களை
- mina l-kufāri
- مِّنَ ٱلْكُفَّارِ
- நிராகரிப்பாளர்களில்
- walyajidū
- وَلْيَجِدُوا۟
- இன்னும் அவர்கள் காணட்டும்
- fīkum
- فِيكُمْ
- உங்களிடம்
- ghil'ẓatan
- غِلْظَةًۚ
- கடுமையை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- இன்னும் அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- maʿa l-mutaqīna
- مَعَ ٱلْمُتَّقِينَ
- அஞ்சுபவர்களுடன்
நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கும் (விஷமிகளாகிய) நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௩)Tafseer
وَاِذَا مَآ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ اَيُّكُمْ زَادَتْهُ هٰذِهٖٓ اِيْمَانًاۚ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِيْمَانًا وَّهُمْ يَسْتَبْشِرُوْنَ ١٢٤
- wa-idhā mā unzilat
- وَإِذَا مَآ أُنزِلَتْ
- இறக்கப்பட்டால்
- sūratun
- سُورَةٌ
- ஓர் அத்தியாயம்
- famin'hum
- فَمِنْهُم
- அவர்களில்
- man
- مَّن
- எவர்
- yaqūlu
- يَقُولُ
- கூறுவார்
- ayyukum
- أَيُّكُمْ
- உங்களில் எவர்
- zādathu hādhihi
- زَادَتْهُ هَٰذِهِۦٓ
- அதிகப்படுத்தியது/அவருக்கு/இது
- īmānan
- إِيمَٰنًاۚ
- நம்பிக்கை
- fa-ammā alladhīna
- فَأَمَّا ٱلَّذِينَ
- ஆகவே/எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- fazādathum
- فَزَادَتْهُمْ
- அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
- īmānan
- إِيمَٰنًا
- நம்பிக்கையை
- wahum
- وَهُمْ
- அவர்களோ
- yastabshirūna
- يَسْتَبْشِرُونَ
- மகிழ்ச்சியடைகின்றனர்
யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் "உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?" என்று கேட்கக் கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதனைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௪)Tafseer
وَاَمَّا الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰى رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ١٢٥
- wa-ammā
- وَأَمَّا
- ஆகவே
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- fī qulūbihim
- فِى قُلُوبِهِم
- அவர்களுடைய உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- ஒரு நோய்
- fazādathum
- فَزَادَتْهُمْ
- அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
- rij'san
- رِجْسًا
- ஒரு அசுத்தத்தை
- ilā rij'sihim
- إِلَىٰ رِجْسِهِمْ
- அவர்களுடைய அசுத்தத்துடன்
- wamātū
- وَمَاتُوا۟
- இன்னும் இறந்தனர்
- wahum kāfirūna
- وَهُمْ كَٰفِرُونَ
- நிராகரிப்பாளர்களாகவே
ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் பின்னும் அசுத்தத்தையே (அது) அதிகரித்துவிட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௫)Tafseer
اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَنُوْنَ فِيْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ ١٢٦
- awalā yarawna
- أَوَلَا يَرَوْنَ
- அல்லதுபார்க்கவில்லையா
- annahum
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- yuf'tanūna
- يُفْتَنُونَ
- சோதிக்கப்படுகின்றனர்
- fī kulli
- فِى كُلِّ
- ஒவ்வொன்றில்
- ʿāmin
- عَامٍ
- ஆண்டு
- marratan
- مَّرَّةً
- ஒரு முறை
- aw
- أَوْ
- அல்லது
- marratayni
- مَرَّتَيْنِ
- இரு முறைகள்
- thumma
- ثُمَّ
- பிறகு
- lā yatūbūna
- لَا يَتُوبُونَ
- அவர்கள் திருந்தவில்லை
- walā hum yadhakkarūna
- وَلَا هُمْ يَذَّكَّرُونَ
- இன்னும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை
ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௬)Tafseer
وَاِذَا مَآ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍۗ هَلْ يَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْاۗ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ ١٢٧
- wa-idhā mā unzilat
- وَإِذَا مَآ أُنزِلَتْ
- இறக்கப்பட்டால்
- sūratun
- سُورَةٌ
- ஓர் அத்தியாயம்
- naẓara
- نَّظَرَ
- பார்க்கிறார்கள்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- ilā baʿḍin hal
- إِلَىٰ بَعْضٍ هَلْ
- சிலரின் பக்கம்/?
- yarākum
- يَرَىٰكُم
- பார்க்கின்றனர்/ உங்களை
- min aḥadin thumma
- مِّنْ أَحَدٍ ثُمَّ
- ஒருவரும்/பின்னர்
- inṣarafū
- ٱنصَرَفُوا۟ۚ
- திரும்பி விடுகின்றனர்
- ṣarafa
- صَرَفَ
- திருப்பி விட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- qulūbahum
- قُلُوبَهُم
- உள்ளங்களை/அவர்களுடைய
- bi-annahum
- بِأَنَّهُمْ
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- qawmun
- قَوْمٌ
- மக்களாக
- lā yafqahūna
- لَّا يَفْقَهُونَ
- அறியமாட்டார்கள்
யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) "உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?" என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௭)Tafseer
لَقَدْ جَاۤءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ ١٢٨
- laqad
- لَقَدْ
- வந்து விட்டார்
- jāakum
- جَآءَكُمْ
- உங்களிடம்
- rasūlun
- رَسُولٌ
- ஒரு தூதர்
- min anfusikum
- مِّنْ أَنفُسِكُمْ
- உங்களிலிருந்தே
- ʿazīzun
- عَزِيزٌ
- கடினமானது
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- mā ʿanittum
- مَا عَنِتُّمْ
- நீங்கள் சிரமப்படுவது
- ḥarīṣun
- حَرِيصٌ
- பேராசையுடையவர்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- bil-mu'minīna
- بِٱلْمُؤْمِنِينَ
- மீது/ நம்பிக்கையாளர்கள்
- raūfun
- رَءُوفٌ
- பெரும் இரக்கமுள்ளவர்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையுள்ளவர்
(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௮)Tafseer
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ࣖ ١٢٩
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- அவர்கள் திரும்பினால்
- faqul
- فَقُلْ
- கூறுவீராக
- ḥasbiya l-lahu
- حَسْبِىَ ٱللَّهُ
- அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
- lā ilāha
- لَآ إِلَٰهَ
- அறவே இல்லை/வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- தவிர/அவனை
- ʿalayhi
- عَلَيْهِ
- அவன் மீதே
- tawakkaltu
- تَوَكَّلْتُۖ
- நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
- wahuwa rabbu
- وَهُوَ رَبُّ
- அவன் அதிபதி
- l-ʿarshi
- ٱلْعَرْشِ
- அர்ஷின்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- மகத்தானது
(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உங்களைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான "அர்ஷின்" அதிபதி. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௯)Tafseer