Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Word by Word

At-Tawbah

(at-Tawbah)

بَرَاۤءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖٓ اِلَى الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَۗ ١

barāatun
بَرَآءَةٌ
நீங்குதல், விலகுதல்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்திலிருந்து
warasūlihi
وَرَسُولِهِۦٓ
இன்னும் அவனுடைய தூதர்
ilā alladhīna
إِلَى ٱلَّذِينَ
எவர்களுக்கு
ʿāhadttum
عَٰهَدتُّم
உடன்படிக்கை செய்தீர்கள்
mina l-mush'rikīna
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்! ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧)
Tafseer

فَسِيْحُوْا فِى الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْٓا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِ ۙوَاَنَّ اللّٰهَ مُخْزِى الْكٰفِرِيْنَ ٢

fasīḥū
فَسِيحُوا۟
ஆகவே நீங்கள் சுற்றலாம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
arbaʿata
أَرْبَعَةَ
நான்கு
ashhurin
أَشْهُرٍ
மாதங்கள்
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
annakum
أَنَّكُمْ
நிச்சயம் நீங்கள்
ghayru muʿ'jizī
غَيْرُ مُعْجِزِى
பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்
l-lahi
ٱللَّهِۙ
அல்லாஹ்வை
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
mukh'zī
مُخْزِى
இழிவுபடுத்துபவன்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களை
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரையில் (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்" (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨)
Tafseer

وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖٓ اِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِيْۤءٌ مِّنَ الْمُشْرِكِيْنَ ەۙ وَرَسُوْلُهٗ ۗفَاِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْۚ وَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْٓا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِ ۗوَبَشِّرِ الَّذِيْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَلِيْمٍۙ ٣

wa-adhānun
وَأَذَٰنٌ
அறிவிப்பு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
warasūlihi
وَرَسُولِهِۦٓ
இன்னும் அவனுடைய தூதர்
ilā
إِلَى
பக்கம்
l-nāsi
ٱلنَّاسِ
மக்கள்
yawma
يَوْمَ
நாள்
l-ḥaji
ٱلْحَجِّ
ஹஜ்ஜுடைய
l-akbari
ٱلْأَكْبَرِ
மாபெரும்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
barīon
بَرِىٓءٌ
விலகியவன் (விலகியவர்கள்)
mina
مِّنَ
இருந்து
l-mush'rikīna
ٱلْمُشْرِكِينَۙ
இணைவைப்பவர்கள்
warasūluhu
وَرَسُولُهُۥۚ
இன்னும் அவனுடைய தூதர்
fa-in tub'tum
فَإِن تُبْتُمْ
நீங்கள் திருந்தினால்
fahuwa
فَهُوَ
அது
khayrun lakum
خَيْرٌ لَّكُمْۖ
உங்களுக்கு மிக்க நன்று
wa-in tawallaytum
وَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள் விலகினால்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ghayru muʿ'jizī
غَيْرُ مُعْجِزِى
பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வை
wabashiri
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
biʿadhābin alīmin
بِعَذَابٍ أَلِيمٍ
துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே! இணைவைப்பதிலிருந்தும் நிராகரிப்பதில் இருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத்தான் மிக்க நன்று. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தாலோ நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (நபியே! இந்)நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩)
Tafseer

اِلَّا الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ ثُمَّ لَمْ يَنْقُصُوْكُمْ شَيْـًٔا وَّلَمْ يُظَاهِرُوْا عَلَيْكُمْ اَحَدًا فَاَتِمُّوْٓا اِلَيْهِمْ عَهْدَهُمْ اِلٰى مُدَّتِهِمْۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ ٤

illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ʿāhadttum
عَٰهَدتُّم
நீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள்
mina l-mush'rikīna
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
thumma
ثُمَّ
பிறகு
lam
لَمْ
அவர்கள் குறைக்காமல்
yanquṣūkum
يَنقُصُوكُمْ
அவர்கள் குறைக்காமல் உங்களுக்கு
shayan
شَيْـًٔا
எதையும்
walam yuẓāhirū
وَلَمْ يُظَٰهِرُوا۟
அவர்கள் உதவாமல்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு எதிராக
aḥadan
أَحَدًا
ஒருவருக்கும்
fa-atimmū
فَأَتِمُّوٓا۟
முழுமைப்படுத்துங்கள்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
ʿahdahum
عَهْدَهُمْ
அவர்களின் உடன்படிக்கையை
ilā muddatihim
إِلَىٰ مُدَّتِهِمْۚ
அவர்களுடைய தவணை வரை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை
ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) யாதொன்றையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரையில் (யாதொரு குறைவுமின்றி) முழுமைபடுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪)
Tafseer

فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥

fa-idhā insalakha
فَإِذَا ٱنسَلَخَ
முடிந்துவிட்டால்
l-ashhuru
ٱلْأَشْهُرُ
மாதங்கள்
l-ḥurumu
ٱلْحُرُمُ
புனித(மானவை)
fa-uq'tulū
فَٱقْتُلُوا۟
கொல்லுங்கள்
l-mush'rikīna
ٱلْمُشْرِكِينَ
இணை வைப்பவர்களை
ḥaythu
حَيْثُ
எங்கு/கண்டீர்கள்
wajadttumūhum
وَجَدتُّمُوهُمْ
எங்கு/கண்டீர்கள் அவர்களை
wakhudhūhum
وَخُذُوهُمْ
இன்னும் பிடியுங்கள் அவர்களை
wa-uḥ'ṣurūhum
وَٱحْصُرُوهُمْ
இன்னும் முற்றுகையிடுங்கள் அவர்களை
wa-uq'ʿudū
وَٱقْعُدُوا۟
இன்னும் அமருங்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
kulla
كُلَّ
ஒவ்வொரு
marṣadin
مَرْصَدٍۚ
பதுங்குமிடத்தில்
fa-in tābū
فَإِن تَابُوا۟
அவர்கள் திருந்தினால்
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினால்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தால்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
fakhallū
فَخَلُّوا۟
விட்டுவிடுங்கள்
sabīlahum
سَبِيلَهُمْۚ
அவர்களுடைய வழியை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர் புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பில் இருந்தும்) பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫)
Tafseer

وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِيْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰى يَسْمَعَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَأْمَنَهٗ ۗذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُوْنَ ࣖ ٦

wa-in aḥadun
وَإِنْ أَحَدٌ
ஆல்/ஒருவர்
mina l-mush'rikīna
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
is'tajāraka
ٱسْتَجَارَكَ
பாதுகாப்புத் தேடினார்/உம்மிடம்
fa-ajir'hu
فَأَجِرْهُ
பாதுகாப்பு அளிப்பீராக/அவருக்கு
ḥattā yasmaʿa
حَتَّىٰ يَسْمَعَ
செவியுறும் வரை
kalāma
كَلَٰمَ
பேச்சை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thumma
ثُمَّ
பிறகு
abligh'hu
أَبْلِغْهُ
சேர்த்து விடுவீராக/அவரை
mamanahu
مَأْمَنَهُۥۚ
அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு
dhālika
ذَٰلِكَ
நிச்சயமாக அவர்கள்
bi-annahum
بِأَنَّهُمْ
அதற்குக் காரணம்
qawmun
قَوْمٌ
சமுதாயம்
lā yaʿlamūna
لَّا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உங்களிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும் வரையில் அவனுக்கு பாதுகாப்பு அளியுங்கள். (அவன் அதனை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளா விட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பி விடுவீர்களாக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬)
Tafseer

كَيْفَ يَكُوْنُ لِلْمُشْرِكِيْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖٓ اِلَّا الَّذِيْنَ عَاهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِۚ فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِيْمُوْا لَهُمْ ۗاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ ٧

kayfa
كَيْفَ
எப்படி?
yakūnu
يَكُونُ
இருக்கும்
lil'mush'rikīna
لِلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு
ʿahdun
عَهْدٌ
ஒப்பந்தம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
waʿinda rasūlihi
وَعِندَ رَسُولِهِۦٓ
இன்னும் அவனுடைய தூதரிடம்
illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ʿāhadttum
عَٰهَدتُّمْ
நீங்கள் ஒப்பந்தம் செய்தீர்கள்
ʿinda l-masjidi
عِندَ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதிடம்
l-ḥarāmi
ٱلْحَرَامِۖ
புனித(மானது)
famā is'taqāmū
فَمَا ٱسْتَقَٰمُوا۟
அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளும் வரை
lakum
لَكُمْ
உங்களுடன்
fa-is'taqīmū
فَٱسْتَقِيمُوا۟
ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்
lahum
لَهُمْۚ
அவர்களுடன்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிப்பான்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரையில், நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭)
Tafseer

كَيْفَ وَاِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ لَا يَرْقُبُوْا فِيْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ۗيُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَأْبٰى قُلُوْبُهُمْۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَۚ ٨

kayfa
كَيْفَ
எவ்வாறு?
wa-in yaẓharū
وَإِن يَظْهَرُوا۟
அவர்கள் வெற்றி கொண்டால்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களை
lā yarqubū
لَا يَرْقُبُوا۟
பொருட்படுத்த மாட்டார்கள்
fīkum illan
فِيكُمْ إِلًّا
உங்களுடன்/உறவை
walā dhimmatan
وَلَا ذِمَّةًۚ
இன்னும் ஒப்பந்தத்தை
yur'ḍūnakum
يُرْضُونَكُم
திருப்திபடுத்துகின்றனர்/உங்களை
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْ
தங்கள் வாய்களால்
watabā
وَتَأْبَىٰ
மறுக்கின்றன
qulūbuhum
قُلُوبُهُمْ
அவர்களுடைய உள்ளங்கள்
wa-aktharuhum fāsiqūna
وَأَكْثَرُهُمْ فَٰسِقُونَ
அவர்களில் அதிகமானோர்/பாவிகள்
(எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட் படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக்கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகவே இருக்கின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮)
Tafseer

اِشْتَرَوْا بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا فَصَدُّوْا عَنْ سَبِيْلِهٖۗ اِنَّهُمْ سَاۤءَ مَاكَانُوْا يَعْمَلُوْنَ ٩

ish'taraw biāyāti
ٱشْتَرَوْا۟ بِـَٔايَٰتِ
வாங்கினார்கள்/வசனங்களுக்குப் பகரமாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thamanan
ثَمَنًا
விலையை
qalīlan
قَلِيلًا
சொற்பமானது
faṣaddū
فَصَدُّوا۟
தடுத்தனர்
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦٓۚ
அவனுடைய பாதையை விட்டு
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
sāa
سَآءَ
கெட்டு விட்டது
mā kānū
مَا كَانُوا۟
எது/இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯)
Tafseer
௧௦

لَا يَرْقُبُوْنَ فِيْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ١٠

lā yarqubūna
لَا يَرْقُبُونَ
பொருட்படுத்த மாட்டார்கள்
fī mu'minin
فِى مُؤْمِنٍ
நம்பிக்கையாளர்(கள்) விஷயத்தில்
illan
إِلًّا
உறவை
walā dhimmatan
وَلَا ذِمَّةًۚ
இன்னும் ஒப்பந்தத்தை
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muʿ'tadūna
ٱلْمُعْتَدُونَ
வரம்பு மீறிகள்
அவர்கள், எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தம்) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இத்தகையவர்கள்தான் வரம்பு மீறியவர்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦)
Tafseer