Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௭௩

Qur'an Surah Al-Anfal Verse 73

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌۗ (الأنفال : ٨)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தனர்
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
அவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
(are) allies
பொறுப்பாளர்கள்
baʿḍin
بَعْضٍۚ
(to) another
சிலருக்கு
illā tafʿalūhu
إِلَّا تَفْعَلُوهُ
If not you do it
நீங்கள் செய்யவில்லையென்றால்/அதை
takun
تَكُن
(there) will be
ஆகிவிடும்
fit'natun
فِتْنَةٌ
oppression
குழப்பம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
wafasādun
وَفَسَادٌ
and corruption
இன்னும் கலகம்
kabīrun
كَبِيرٌ
great
பெரியது

Transliteration:

Wallazeena kafaroo ba'duhum awliyaaa'u ba'd; illaa taf'aloohu takun fitnatun fil ardi wa fasaadun kabeer (QS. al-ʾAnfāl:73)

English Sahih International:

And those who disbelieved are allies of one another. If you do not do so [i.e., ally yourselves with other believers], there will be fitnah [i.e., disbelief and oppression] on earth and great corruption. (QS. Al-Anfal, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்தரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௭௩)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பவர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். (இவ்வாறு) நீங்கள் அதை செய்யவில்லையென்றால் (நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவில்லையென்றால்), பூமியில் குழப்பமும் பெரும் கலகமும் ஆகிவிடும்.