Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬௭

Qur'an Surah Al-Anfal Verse 67

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَاكَانَ لِنَبِيٍّ اَنْ يَّكُوْنَ لَهٗٓ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِۗ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَاۖ وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَۗ وَاللّٰهُ عَزِيْزٌحَكِيْمٌ (الأنفال : ٨)

mā kāna
مَا كَانَ
Not is
ஆகுமானதல்ல
linabiyyin
لِنَبِىٍّ
for a Prophet
ஒரு நபிக்கு
an yakūna
أَن يَكُونَ
that (there) should be
இருப்பது
lahu
لَهُۥٓ
for him
அவருக்கு
asrā ḥattā
أَسْرَىٰ حَتَّىٰ
prisoners of war until
கைதிகள்/வரை
yuth'khina
يُثْخِنَ
he has battled strenuously
கொன்று குவிப்பார்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
in the land
பூமியில்
turīdūna
تُرِيدُونَ
You desire
நாடுகிறீர்கள்
ʿaraḍa
عَرَضَ
(the) commodities
பொருளை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலகத்தின்
wal-lahu
وَٱللَّهُ
but Allah
அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
desires
நாடுகிறான்
l-ākhirata
ٱلْءَاخِرَةَۗ
(for you) the Hereafter
மறுமையை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
ஞானவான்

Transliteration:

Maa kaana li Nabiyyin ai yakoona lahooo asraa hatta yuskhina fil ard; tureedoona aradad dunyaa wallaahu yureedul Aakhirah; wallaahu 'Azeezun Hakeem (QS. al-ʾAnfāl:67)

English Sahih International:

It is not for a prophet to have captives [of war] until he inflicts a massacre [upon Allah's enemies] in the land. You [i.e., some Muslims] desire the commodities of this world, but Allah desires [for you] the Hereafter. And Allah is Exalted in Might and Wise. (QS. Al-Anfal, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகின்றான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௬௭)

Jan Trust Foundation

(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(கலகம் செய்கின்ற எதிரிகளை) இப்பூமியில் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதிகளாக்குவது ஒரு நபிக்கு ஆகுமானதல்ல. (நீங்கள்) உலகத்தின் பொருளை நாடுகிறீர்கள். அல்லாஹ் (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.