Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬௫

Qur'an Surah Al-Anfal Verse 65

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِۗ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْٓا اَلْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ (الأنفال : ٨)

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
O! Prophet!
நபியே!
ḥarriḍi
حَرِّضِ
Urge
தூண்டுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்களை
ʿalā l-qitāli
عَلَى ٱلْقِتَالِۚ
to [the] fight
போருக்கு
in yakun
إِن يَكُن
If (there) are
இருந்தால்
minkum
مِّنكُمْ
among you
உங்களில்
ʿish'rūna
عِشْرُونَ
twenty
இருபது (நபர்கள்)
ṣābirūna
صَٰبِرُونَ
steadfast
பொறுமையாளர்கள்
yaghlibū
يَغْلِبُوا۟
they will overcome
வெல்வார்கள்
mi-atayni
مِا۟ئَتَيْنِۚ
two hundred
இரு நூறு(நபர்களை)
wa-in yakun minkum
وَإِن يَكُن مِّنكُم
And if (there) are among you
இருந்தால்/உங்களில்
mi-atun
مِّا۟ئَةٌ
a hundred
நூறு (நபர்கள்)
yaghlibū
يَغْلِبُوٓا۟
they will overcome
வெல்வார்கள்
alfan
أَلْفًا
a thousand
ஆயிரம் (நபர்களை)
mina
مِّنَ
of
இருந்து
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரித்தவர்கள்
bi-annahum
بِأَنَّهُمْ
because they
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
lā yafqahūna
لَّا يَفْقَهُونَ
(who do) not understand
சிந்தித்து விளங்க மாட்டார்கள்

Transliteration:

Yaaa aiyuhan Nabiyyu harridil mu'mineena 'alal qitaal; iny-yakum minkum 'ishroona saabiroona yaghliboo mi'atayn; wa iny-yakum minkum min'atuny yaghlibooo alfam minal lazeena kafaroo bi anahum qawmul laa yafqahoon (QS. al-ʾAnfāl:65)

English Sahih International:

O Prophet, urge the believers to battle. If there are among you twenty [who are] steadfast, they will overcome two hundred. And if there are among you one hundred [who are steadfast], they will overcome a thousand of those who have disbelieved because they are a people who do not understand. (QS. Al-Anfal, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

(அன்றி) நபியே! நீங்கள் நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும் படித்) தூண்டுங்கள். உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௬௫)

Jan Trust Foundation

நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் தூண்டுவீராக! உங்களில் இருபது பொறுமையாளர்கள் இருந்தால் இருநூறு நபர்களை வெல்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு நபர்கள் இருந்தால் நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்களை வெல்வார்கள். (அதற்குக்) காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத மக்கள் ஆகும்.