குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௮
Qur'an Surah Al-Anfal Verse 48
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّيْ جَارٌ لَّكُمْۚ فَلَمَّا تَرَاۤءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّيْ بَرِيْۤءٌ مِّنْكُمْ اِنِّيْٓ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ ۗوَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ ࣖ (الأنفال : ٨)
- wa-idh
- وَإِذْ
- And when
- சமயம்
- zayyana
- زَيَّنَ
- made fair-seeming
- அலங்கரித்தான்
- lahumu
- لَهُمُ
- to them
- அவர்களுக்கு
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- the Shaitaan
- ஷைத்தான்
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- their deeds
- அவர்களுடைய செயல்களை
- waqāla
- وَقَالَ
- and he said
- இன்னும் கூறினான்
- lā
- لَا
- "No (one)
- அறவே இல்லை
- ghāliba
- غَالِبَ
- (can) overcome
- வெல்பவர்
- lakumu
- لَكُمُ
- [to] you
- உங்களை
- l-yawma
- ٱلْيَوْمَ
- today
- இன்று
- mina l-nāsi
- مِنَ ٱلنَّاسِ
- from the people
- மக்களில்
- wa-innī
- وَإِنِّى
- and indeed, I am
- நிச்சயமாக நான்
- jārun
- جَارٌ
- a neighbor
- துணை
- lakum
- لَّكُمْۖ
- for you"
- உங்களுக்கு
- falammā
- فَلَمَّا
- But when
- போது
- tarāati
- تَرَآءَتِ
- came in sight
- பார்த்தன ஒன்றுக்கொன்று
- l-fi-atāni
- ٱلْفِئَتَانِ
- the two forces
- இரு கூட்டங்கள்
- nakaṣa
- نَكَصَ
- he turned away
- திரும்பினான்
- ʿalā ʿaqibayhi
- عَلَىٰ عَقِبَيْهِ
- on his heels
- தன் இரு குதிங்கால்கள் மீது
- waqāla
- وَقَالَ
- and said
- இன்னும் கூறினான்
- innī
- إِنِّى
- "Indeed, I am
- நிச்சயமாக நான்
- barīon
- بَرِىٓءٌ
- free
- விலகியவன்
- minkum
- مِّنكُمْ
- of you
- உங்களை விட்டு
- innī
- إِنِّىٓ
- Indeed, I
- நிச்சயமாக நான்
- arā
- أَرَىٰ
- see
- பார்க்கிறேன்
- mā lā tarawna
- مَا لَا تَرَوْنَ
- what not you see
- எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள்
- innī
- إِنِّىٓ
- indeed, I
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- [I] fear
- பயப்படுகிறேன்
- l-laha
- ٱللَّهَۚ
- Allah
- அல்லாஹ்வை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- shadīdu l-ʿiqābi
- شَدِيدُ ٱلْعِقَابِ
- (is) severe (in) the penalty"
- தண்டிப்பதில் கடுமையானவன்
Transliteration:
Wa iz zaiyana lahumush shaitaanu a'ma alahum wa qaala laa ghaaliba lakumul yawma minan naasi wa innee jaarul lakum falammaa taraaa'atil fi'ataani nakasa 'alaa aqibaihi wa qaala innee bareee'um minkum innee araa maa laa tarawna inneee akhaaful laah; wallaahu shadeedul 'iqaab(QS. al-ʾAnfāl:48)
English Sahih International:
And [remember] when Satan made their deeds pleasing to them and said, "No one can overcome you today from among the people, and indeed, I am your protector." But when the two armies sighted each other, he turned on his heels and said, "Indeed, I am disassociated from you. Indeed, I see what you do not see; indeed, I fear Allah. And Allah is severe in penalty." (QS. Al-Anfal, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து "எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கின்றேன்" என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று "நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்" என்று கூறினான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௪௮)
Jan Trust Foundation
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; உங்களுக்கு நிச்சயமாக நானும் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இரு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பினான்; “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான்.