குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௬
Qur'an Surah Al-Anfal Verse 46
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْاۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ (الأنفال : ٨)
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- And obey
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வுக்கும்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதருக்கும்
- walā tanāzaʿū
- وَلَا تَنَٰزَعُوا۟
- and (do) not dispute
- இன்னும் தர்க்கிக்காதீர்கள்
- fatafshalū
- فَتَفْشَلُوا۟
- lest you lose courage
- அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள்
- watadhhaba
- وَتَذْهَبَ
- and (would) depart
- சென்றுவிடும்
- rīḥukum
- رِيحُكُمْۖ
- your strength
- உங்கள் ஆற்றல்
- wa-iṣ'birū
- وَٱصْبِرُوٓا۟ۚ
- and be patient
- பொறுத்திருங்கள்
- inna l-laha maʿa
- إِنَّ ٱللَّهَ مَعَ
- Indeed Allah (is) with
- நிச்சயமாக அல்லாஹ்/உடன்
- l-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- the patient ones
- பொறுமையாளர்கள்
Transliteration:
Wa atee'ul laaha wa Rasoolahoo wa laa tanaaza'oo fatafshaloo wa tazhaba reehukum wasbiroo; innal laaha ma'as saabireen(QS. al-ʾAnfāl:46)
English Sahih International:
And obey Allah and His Messenger, and do not dispute and [thus] lose courage and [then] your strength would depart; and be patient. Indeed, Allah is with the patient. (QS. Al-Anfal, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௪௬)
Jan Trust Foundation
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; தர்க்கிக்காதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழப்பீர்கள்; உங்கள் ஆற்றல் சென்றுவிடும். பொறுத்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.