Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௫

Qur'an Surah Al-Anfal Verse 25

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَاۤصَّةً ۚوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ (الأنفال : ٨)

wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
அஞ்சுங்கள்
fit'natan
فِتْنَةً
a trial
ஒரு வேதனையை
lā tuṣībanna
لَّا تُصِيبَنَّ
not which will afflict
அடையாது
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
those who do wrong
அநியாயக்காரர்களை
minkum
مِنكُمْ
among you
உங்களில்
khāṣṣatan
خَآصَّةًۖ
exclusively
மட்டுமே
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
And know
அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
(is) severe
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
(in) the penalty
தண்டிப்பதில்

Transliteration:

Wattaqoo fitnatal laa tuseebannal lazeena zalamoo minkum khaaaassatanw wa'lamooo annal laaha shadeedul 'iqaab (QS. al-ʾAnfāl:25)

English Sahih International:

And fear a trial which will not strike those who have wronged among you exclusively, and know that Allah is severe in penalty. (QS. Al-Anfal, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் வேதனைக்குப் பயந்துகொள்ளுங்கள். அது அநியாயக்காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்துகொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௫)

Jan Trust Foundation

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உங்களில் உள்ள அநியாயக்காரர்களை மட்டுமே அடையாத ஒரு வேதனையை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.