குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௯
Qur'an Surah Al-Anfal Verse 19
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَاۤءَكُمُ الْفَتْحُۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّكُمْۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْۚ وَلَنْ تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ ࣖ (الأنفال : ٨)
- in tastaftiḥū
- إِن تَسْتَفْتِحُوا۟
- If you ask for victory
- நீங்கள் தீர்ப்புத் தேடினால்
- faqad
- فَقَدْ
- then certainly
- வந்துவிட்டது
- jāakumu
- جَآءَكُمُ
- has come to you
- உங்களுக்கு
- l-fatḥu
- ٱلْفَتْحُۖ
- the victory
- தீர்ப்பு
- wa-in tantahū
- وَإِن تَنتَهُوا۟
- And if you desist
- நீங்கள் விலகினால்
- fahuwa khayrun
- فَهُوَ خَيْرٌ
- then it (is) good
- அது சிறந்தது
- lakum
- لَّكُمْۖ
- for you
- உங்களுக்கு
- wa-in taʿūdū
- وَإِن تَعُودُوا۟
- but if you return
- நீங்கள் திரும்பினால்
- naʿud
- نَعُدْ
- We will return (too)
- திரும்புவோம்
- walan tugh'niya
- وَلَن تُغْنِىَ
- And never will avail
- பலனளிக்காது
- ʿankum
- عَنكُمْ
- you
- உங்களுக்கு
- fi-atukum
- فِئَتُكُمْ
- your forces
- உங்கள் கூட்டம்
- shayan
- شَيْـًٔا
- anything
- எதையும்
- walaw kathurat
- وَلَوْ كَثُرَتْ
- even if (they are) numerous
- அது அதிகமாக இருந்தாலும்
- wa-anna
- وَأَنَّ
- And that
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- maʿa
- مَعَ
- (is) with
- உடன்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
Transliteration:
In tastaftihoo faqad jaaa'akumul fathu wa in tantahoo fahuwa khairul lakum wa in ta'oodoo na'ud wa lan tughniya 'ankum fi'atukum shai'anw wa law kasurat wa annal laaha ma'al mu'mineen(QS. al-ʾAnfāl:19)
English Sahih International:
If you [disbelievers] seek the decision [i.e., victory] – the decision [i.e., defeat] has come to you. And if you desist [from hostilities], it is best for you; but if you return [to war], We will return, and never will you be availed by your [large] company at all, even if it should increase; and [that is] because Allah is with the believers. (QS. Al-Anfal, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(மக்காவாழ் காஃபிர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றிகொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு யாதொரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௯)
Jan Trust Foundation
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(காஃபிர்களே!) நீங்கள் தீர்ப்புத் தேடினால் உங்களுக்கு தீர்ப்பு வந்துவிட்டது. (ஆகவே, விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால் அது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் (விஷமத்திற்கு) திரும்பினால் (நாமும் நம்பிக்கையாளர்களுக்கு உதவ) திரும்புவோம். உங்கள் கூட்டம் அது அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு எதையும் பலனளிக்காது. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.