Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௭

Qur'an Surah Al-Anfal Verse 17

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْۖ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰىۚ وَلِيُبْلِيَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًاۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ (الأنفال : ٨)

falam
فَلَمْ
And not
நீங்கள் கொல்லவில்லை
taqtulūhum
تَقْتُلُوهُمْ
you kill them
நீங்கள் கொல்லவில்லை அவர்களை
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
qatalahum
قَتَلَهُمْۚ
killed them
கொன்றான்/அவர்களை
wamā ramayta
وَمَا رَمَيْتَ
And not you threw
நீர் எறியவில்லை
idh ramayta
إِذْ رَمَيْتَ
when you threw
போது/எறிந்தீர்
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும் நிச்சயமாக
l-laha ramā
ٱللَّهَ رَمَىٰۚ
Allah threw
அல்லாஹ்/எறிந்தான்
waliyub'liya
وَلِيُبْلِىَ
and that He may test
இன்னும் அவன் சோதிப்பதற்காக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்களை
min'hu
مِنْهُ
from Him
அதன் மூலம்
balāan
بَلَآءً
(with) a trial
சோதனையாக
ḥasanan
حَسَنًاۚ
good
அழகிய
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearing
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Falam taqtuloohum wa laakinnal laaha qatalahum; wa maa ramaita iz ramaita wa laakinnal laaha ramaa; wa liyubliyal mu'mineena minhu balaaa'an hasanaa; innal laaha Samee'un Aleem (QS. al-ʾAnfāl:17)

English Sahih International:

And you did not kill them, but it was Allah who killed them. And you threw not, [O Muhammad], when you threw, but it was Allah who threw that He might test the believers with a good test. Indeed, Allah is Hearing and Knowing. (QS. Al-Anfal, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௭)

Jan Trust Foundation

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே! போரில்) நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; என்றாலும் அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். (நபியே! எதிரிகள் மீது நீர் மண்ணை) எறிந்தபோது நீர் எறியவில்லை; என்றாலும் நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். அதன் மூலம் நம்பிக்கையாளர்களை அழகிய சோதனையாக அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன் நன்றிந்தவன்.