وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٧١
- wa-in yurīdū
- وَإِن يُرِيدُوا۟
- அவர்கள் நாடினால்
- khiyānataka
- خِيَانَتَكَ
- உமக்கு மோசடி செய்ய
- faqad khānū
- فَقَدْ خَانُوا۟
- மோசடிசெய்துள்ளனர்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கு
- min qablu
- مِن قَبْلُ
- முன்னர்
- fa-amkana
- فَأَمْكَنَ
- ஆகவே ஆதிக்கமளித்தான்
- min'hum
- مِنْهُمْۗ
- அவர்கள் மீது
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- ஞானவான்
(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௧)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْٓا اُولٰۤىِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَيْءٍ حَتّٰى يُهَاجِرُوْاۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٧٢
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- wahājarū
- وَهَاجَرُوا۟
- இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- இன்னும் போர் புரிந்தனர்
- bi-amwālihim
- بِأَمْوَٰلِهِمْ
- தங்கள் பொருள்களாலும்
- wa-anfusihim
- وَأَنفُسِهِمْ
- இன்னும் தங்கள் உயிர்களாலும்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āwaw
- ءَاوَوا۟
- அரவணைத்தனர்
- wanaṣarū
- وَّنَصَرُوٓا۟
- இன்னும் உதவினர்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- இவர்களில் சிலர்
- awliyāu
- أَوْلِيَآءُ
- பொறுப்பாளர்கள்
- baʿḍin
- بَعْضٍۚ
- சிலருக்கு
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- walam yuhājirū
- وَلَمْ يُهَاجِرُوا۟
- ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை
- mā lakum
- مَا لَكُم
- உங்களுக்கு ஆகுமானதல்ல
- min walāyatihim
- مِّن وَلَٰيَتِهِم
- இருந்து/அவர்களுக்கு பொறுப்பு
- min shayin
- مِّن شَىْءٍ
- எந்த ஒன்றுக்கும்
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yuhājirū
- يُهَاجِرُوا۟ۚ
- ஹிஜ்ரா செல்வார்கள்
- wa-ini
- وَإِنِ
- அவர்கள் உதவி தேடினால்
- is'tanṣarūkum
- ٱسْتَنصَرُوكُمْ
- அவர்கள் உதவி தேடினால் உங்களிடம்
- fī l-dīni
- فِى ٱلدِّينِ
- மார்க்கத்தில்
- faʿalaykumu
- فَعَلَيْكُمُ
- உங்கள் மீது கடமை
- l-naṣru
- ٱلنَّصْرُ
- உதவுவது
- illā
- إِلَّا
- தவிர
- ʿalā
- عَلَىٰ
- எதிராக
- qawmin
- قَوْمٍۭ
- ஒரு சமுதாயம்
- baynakum
- بَيْنَكُمْ
- உங்களுக்கிடையில்
- wabaynahum
- وَبَيْنَهُم
- இன்னும் அவர்களுக்கு இடையில்
- mīthāqun
- مِّيثَٰقٌۗ
- உடன்படிக்கை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā
- بِمَا
- எவற்றை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௨)Tafseer
وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌۗ ٧٣
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- awliyāu
- أَوْلِيَآءُ
- பொறுப்பாளர்கள்
- baʿḍin
- بَعْضٍۚ
- சிலருக்கு
- illā tafʿalūhu
- إِلَّا تَفْعَلُوهُ
- நீங்கள் செய்யவில்லையென்றால்/அதை
- takun
- تَكُن
- ஆகிவிடும்
- fit'natun
- فِتْنَةٌ
- குழப்பம்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wafasādun
- وَفَسَادٌ
- இன்னும் கலகம்
- kabīrun
- كَبِيرٌ
- பெரியது
நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்தரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௩)Tafseer
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْٓا اُولٰۤىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّاۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ٧٤
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- wahājarū
- وَهَاجَرُوا۟
- இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- இன்னும் போர் புரிந்தனர்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āwaw
- ءَاوَوا۟
- அரவணைத்தனர்
- wanaṣarū
- وَّنَصَرُوٓا۟
- இன்னும் உதவினர்
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- இவர்கள்தான்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
- ḥaqqan
- حَقًّاۚ
- உண்மையில்
- lahum
- لَّهُم
- இவர்களுக்கு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பு
- wariz'qun
- وَرِزْقٌ
- இன்னும் உணவு
- karīmun
- كَرِيمٌ
- கண்ணியமானது
எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும் பல) உதவியும் செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௪)Tafseer
وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤىِٕكَ مِنْكُمْۗ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِيْ كِتٰبِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٧٥
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- min baʿdu
- مِنۢ بَعْدُ
- பின்னர்
- wahājarū
- وَهَاجَرُوا۟
- இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- இன்னும் போர் புரிந்தனர்
- maʿakum
- مَعَكُمْ
- உங்களுடன்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- minkum
- مِنكُمْۚ
- உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
- wa-ulū l-arḥāmi
- وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
- இரத்த பந்தங்கள்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- awlā
- أَوْلَىٰ
- நெருக்கமானவர்
- bibaʿḍin
- بِبَعْضٍ
- சிலருக்கு
- fī kitābi
- فِى كِتَٰبِ
- வேதத்தில்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர்புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௫)Tafseer