Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Word by Word

Al-Anfal

(al-ʾAnfāl)

bismillaahirrahmaanirrahiim

يَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِۗ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَيْنِكُمْ ۖوَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗٓ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-anfāli
عَنِ ٱلْأَنفَالِۖ
அன்ஃபால் பற்றி
quli
قُلِ
கூறுவீராக
l-anfālu
ٱلْأَنفَالُ
(போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
wal-rasūli
وَٱلرَّسُولِۖ
இன்னும் தூதருக்கு
fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṣliḥū
وَأَصْلِحُوا۟
இன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள்
dhāta baynikum
ذَاتَ بَيْنِكُمْۖ
உங்களுக்கு மத்தியில்
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
warasūlahu
وَرَسُولَهُۥٓ
இன்னும் அவனுடைய தூதருக்கு
in kuntum mu'minīna
إِن كُنتُم مُّؤْمِنِينَ
நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
(நபியே!) "அன்ஃபால்" (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அன்ஃபால்" அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ் வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் யாதொன்றையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧)
Tafseer

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۙ ٢

innamā l-mu'minūna
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
idhā dhukira
إِذَا ذُكِرَ
நினைவுகூரப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வை
wajilat
وَجِلَتْ
நடுங்கும்
qulūbuhum
قُلُوبُهُمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
wa-idhā tuliyat
وَإِذَا تُلِيَتْ
இன்னும் ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் முன்
āyātuhu
ءَايَٰتُهُۥ
வசனங்கள்/அவனுடைய
zādathum
زَادَتْهُمْ
அவை அதிகப்படுத்தும்/அவர்களுக்கு
īmānan
إِيمَٰنًا
இறை நம்பிக்கையை
waʿalā rabbihim
وَعَلَىٰ رَبِّهِمْ
இன்னும் தங்கள் இறைவன் மீதே
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
நம்பிக்கை வைப்பார்கள்
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨)
Tafseer

الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۗ ٣

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuqīmūna
يُقِيمُونَ
நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wamimmā
وَمِمَّا
இன்னும் எதிலிருந்து
razaqnāhum
رَزَقْنَٰهُمْ
கொடுத்தோம்/அவர்களுக்கு
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் புரிவார்கள்
அவர்கள் தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩)
Tafseer

اُولٰۤىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّاۗ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌۚ ٤

ulāika
أُو۟لَٰٓئِكَ
humu
هُمُ
அவர்கள்தான்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
ḥaqqan
حَقًّاۚ
உண்மையில்
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
darajātun
دَرَجَٰتٌ
பல பதவிகள்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
wamaghfiratun
وَمَغْفِرَةٌ
இன்னும் மன்னிப்பு
wariz'qun
وَرِزْقٌ
இன்னும் உணவு
karīmun
كَرِيمٌ
கண்ணியமானது
இத்தகையவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; அன்றி, கண்ணியமான உணவும் உண்டு. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪)
Tafseer

كَمَآ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَقِّۖ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَكٰرِهُوْنَ ٥

kamā
كَمَآ
போன்றே
akhrajaka
أَخْرَجَكَ
வெளியேற்றினான்/உம்மை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
min
مِنۢ
இருந்து
baytika
بَيْتِكَ
உம் இல்லம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
farīqan
فَرِيقًا
ஒரு பிரிவினர்
mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
lakārihūna
لَكَٰرِهُونَ
வெறுப்பவர்களே
(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫)
Tafseer

يُجَادِلُوْنَكَ فِى الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَ ۗ ٦

yujādilūnaka
يُجَٰدِلُونَكَ
தர்க்கிக்கின்றனர்/உம்முடன்
fī l-ḥaqi
فِى ٱلْحَقِّ
உண்மையில்
baʿdamā tabayyana
بَعْدَمَا تَبَيَّنَ
பின்னர் தெளிவானது
ka-annamā
كَأَنَّمَا
போன்று
yusāqūna
يُسَاقُونَ
ஓட்டிச் செல்லப்படுகிறார்கள்
ilā
إِلَى
பக்கம்
l-mawti
ٱلْمَوْتِ
மரணம்
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
yanẓurūna
يَنظُرُونَ
பார்ப்பவர்களாக
(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬)
Tafseer

وَاِذْ يَعِدُكُمُ اللّٰهُ اِحْدَى الطَّاۤىِٕفَتَيْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْكٰفِرِيْنَۙ ٧

wa-idh
وَإِذْ
சமயம்
yaʿidukumu
يَعِدُكُمُ
வாக்களித்தான்/உங்களுக்கு
l-lahu iḥ'dā
ٱللَّهُ إِحْدَى
அல்லாஹ்/ஒன்றை
l-ṭāifatayni
ٱلطَّآئِفَتَيْنِ
இரு கூட்டங்களில்
annahā
أَنَّهَا
நிச்சயம் அது
lakum
لَكُمْ
உங்களுக்கு
watawaddūna
وَتَوَدُّونَ
விரும்பினீர்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
ghayra
غَيْرَ
அல்லாதது
dhāti
ذَاتِ
உடையது
l-shawkati
ٱلشَّوْكَةِ
ஆயுதம் (பலம்)
takūnu
تَكُونُ
ஆகவேண்டும்
lakum
لَكُمْ
உங்களுக்கு
wayurīdu
وَيُرِيدُ
இன்னும் நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yuḥiqqa
أَن يُحِقَّ
உண்மைப்படுத்த
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
bikalimātihi
بِكَلِمَٰتِهِۦ
தன் வாக்குகளைக் கொண்டு
wayaqṭaʿa
وَيَقْطَعَ
இன்னும் துண்டித்துவிட
dābira
دَابِرَ
வேரை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள்
(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துவிடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்துவிடவே நாடினான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭)
Tafseer

لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَۚ ٨

liyuḥiqqa
لِيُحِقَّ
அவன் உண்மைப்படுத்த
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
wayub'ṭila
وَيُبْطِلَ
இன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விட
l-bāṭila
ٱلْبَٰطِلَ
பொய்யை
walaw kariha
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும்
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
பாவிகள், குற்றவாளிகள்
அன்றி, அவன் பாவிகள் வெறுத்தபோதிலும் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்(டவே நா)டினான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௮)
Tafseer

اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّيْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤىِٕكَةِ مُرْدِفِيْنَ ٩

idh tastaghīthūna
إِذْ تَسْتَغِيثُونَ
சமயம்/நீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள்
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
fa-is'tajāba
فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
annī
أَنِّى
நிச்சயமாக நான்
mumiddukum
مُمِدُّكُم
உதவுவேன் உங்களுக்கு
bi-alfin
بِأَلْفٍ
ஆயிரத்தைக்கொண்டு
mina l-malāikati
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களில்
mur'difīna
مُرْدِفِينَ
தொடர்ந்து வரக்கூடியவர்கள்
(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது "அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௯)
Tafseer
௧௦

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْۗ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ࣖ ١٠

wamā jaʿalahu
وَمَا جَعَلَهُ
ஆக்கவில்லை/அதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā
إِلَّا
தவிர
bush'rā
بُشْرَىٰ
ஒரு நற்செய்தியாக
walitaṭma-inna
وَلِتَطْمَئِنَّ
இன்னும் நிம்மதி பெறுவதற்காக
bihi
بِهِۦ
அதன் மூலம்
qulūbukum
قُلُوبُكُمْۚ
உங்கள் உள்ளங்கள்
wamā l-naṣru
وَمَا ٱلنَّصْرُ
இல்லை/உதவி
illā
إِلَّا
தவிர
min
مِنْ
இருந்தே
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
உங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதனை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தேயன்றி (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௦)
Tafseer