குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௧
Qur'an Surah Al-A'raf Verse 71
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌۗ اَتُجَادِلُوْنَنِيْ فِيْٓ اَسْمَاۤءٍ سَمَّيْتُمُوْهَآ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍۗ فَانْتَظِرُوْٓا اِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- qad waqaʿa
- قَدْ وَقَعَ
- "Verily has fallen
- நிகழ்ந்து விட்டது
- ʿalaykum
- عَلَيْكُم
- upon you
- உங்கள் மீது
- min rabbikum
- مِّن رَّبِّكُمْ
- from your Lord
- உங்கள் இறைவனிடமிருந்து
- rij'sun
- رِجْسٌ
- punishment
- வேதனை
- waghaḍabun
- وَغَضَبٌۖ
- and anger
- இன்னும் கோபம்
- atujādilūnanī
- أَتُجَٰدِلُونَنِى
- Do you dispute with me
- தர்க்கிக்கிறீர்களா?/என்னுடன்
- fī asmāin
- فِىٓ أَسْمَآءٍ
- concerning names
- பெயர்களில்
- sammaytumūhā
- سَمَّيْتُمُوهَآ
- you have named them
- பெயர் வைத்தீர்கள்/அவற்றை
- antum
- أَنتُمْ
- you
- நீங்களும்
- waābāukum
- وَءَابَآؤُكُم
- and your forefathers
- இன்னும் மூதாதைகள் உங்கள்
- mā nazzala
- مَّا نَزَّلَ
- Not (has been) sent down
- இறக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- bihā
- بِهَا
- for it
- அதற்கு
- min sul'ṭānin
- مِن سُلْطَٰنٍۚ
- any authority?
- ஓர் ஆதாரத்தை
- fa-intaẓirū
- فَٱنتَظِرُوٓا۟
- Then wait
- ஆகவே, எதிர்பாருங்கள்
- innī
- إِنِّى
- indeed, I am
- நிச்சயமாக நான்
- maʿakum
- مَعَكُم
- with you
- உங்களுடன்
- mina l-muntaẓirīna
- مِّنَ ٱلْمُنتَظِرِينَ
- of the ones who wait
- எதிர்பார்ப்பவர்களில்
Transliteration:
Qaala qad waqa'a alaikum mir Rabbikum rijsunw wa ghadab, atujaadiloonanee feee asmaaa'in sammaitumoohaaa antum wa aabaaa'ukum maa nazzalal laahu bihaa min sultaan; fantazirooo innee ma'akum minal muntazireen(QS. al-ʾAʿrāf:71)
English Sahih International:
[Hud] said, "Already have defilement and anger fallen upon you from your Lord. Do you dispute with me concerning [mere] names you have named them, you and your fathers, for which Allah has not sent down any authority? Then wait; indeed, I am with you among those who wait." (QS. Al-A'raf, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் (உங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள்? அதற்கு யாதொரு ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்கவில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௧)
Jan Trust Foundation
அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும் கோபமும் உங்கள் மீது நிகழ்ந்து விட்டது. நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்த (சிலைகளின்) பெயர்களில் என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை(யே)! ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக, நான் உங்களுடன் எதிர்ப்பார்ப்பவர்களில் இருக்கிறேன்”என்று கூறினார்.