Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௪

Qur'an Surah Al-A'raf Verse 64

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَذَّبُوْهُ فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ فِى الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِيْنَ ࣖ (الأعراف : ٧)

fakadhabūhu
فَكَذَّبُوهُ
But they denied him
பொய்ப்பித்தனர்/அவரை
fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
so We saved him
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
maʿahu
مَعَهُۥ
(were) with him
அவருடன்
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
in the ship
கப்பலில்
wa-aghraqnā
وَأَغْرَقْنَا
And We drowned
இன்னும் மூழ்கடித்தோம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்களை
kadhabū
كَذَّبُوا۟
denied
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَآۚ
Our Verses
நம் வசனங்களை
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
qawman
قَوْمًا
a people
சமுதாயமாக
ʿamīna
عَمِينَ
blind
குருடானவர்கள்

Transliteration:

Fakazzaboohu fa anjai naahu wallazeena ma'ahoo fil fulki wa aghraqnal lazeena kazzaboo bi Aayaatinaa; innahum kaanoo qawman 'ameen (QS. al-ʾAʿrāf:64)

English Sahih International:

But they denied him, so We saved him and those who were with him in the ship. And We drowned those who denied Our signs. Indeed, they were a blind people. (QS. Al-A'raf, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

பின்னும் அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால் அவரையும், அவரைச் சார்ந்தோர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருடர்களாகவே இருந்தனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௪)

Jan Trust Foundation

அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும், அவருடன் கப்பலில் இருந்தோரையும் பாதுகாத்தோம், நம் வசனங்களை பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். நிச்சயமாக அவர்கள் குருடான சமுதாயமாக இருந்தனர்.