குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௩
Qur'an Surah Al-A'raf Verse 63
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَعَجِبْتُمْ اَنْ جَاۤءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ (الأعراف : ٧)
- awaʿajib'tum
- أَوَعَجِبْتُمْ
- Do you wonder
- வியக்கிறீர்களா?
- an
- أَن
- that
- வந்ததைப் பற்றி
- jāakum
- جَآءَكُمْ
- has come to you
- உங்களுக்கு
- dhik'run
- ذِكْرٌ
- a reminder
- நல்லுபதேசம்
- min rabbikum
- مِّن رَّبِّكُمْ
- from your Lord
- உங்கள் இறைவனிடமிருந்து
- ʿalā rajulin
- عَلَىٰ رَجُلٍ
- on a man
- ஒரு மனிதர் மீது
- minkum
- مِّنكُمْ
- among you
- உங்களிலுள்ள
- liyundhirakum
- لِيُنذِرَكُمْ
- that he may warn you
- அவர் எச்சரிப்பதற்காக/உங்களை
- walitattaqū
- وَلِتَتَّقُوا۟
- and that you may fear
- இன்னும் நீங்கள் அஞ்சுவதற்காக
- walaʿallakum tur'ḥamūna
- وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ
- and so that you may receive mercy"
- இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
Transliteration:
awa'ajibtum an jaaa'akum zikrum mir Rabbikum 'alaa rajulim minkum liyunzirakum wa litattaqoo wa la'allakum turhamoon(QS. al-ʾAʿrāf:63)
English Sahih International:
Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you and that you may fear Allah so you might receive mercy?" (QS. Al-A'raf, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற் காகவும், நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கின்றது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௩)
Jan Trust Foundation
உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காகவும் உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி வியக்கிறீர்களா?”