Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௬

Qur'an Surah Al-A'raf Verse 46

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبَيْنَهُمَا حِجَابٌۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّا ۢ بِسِيْمٰىهُمْۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْۗ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ (الأعراف : ٧)

wabaynahumā
وَبَيْنَهُمَا
And between them
அவ்விருவருக்குமிடையில்
ḥijābun
حِجَابٌۚ
(will be) a partition
ஒரு மதில்
waʿalā
وَعَلَى
and on
மீது
l-aʿrāfi
ٱلْأَعْرَافِ
the heights
சிகரங்கள்
rijālun
رِجَالٌ
(will be) men
(சில) மனிதர்கள்
yaʿrifūna
يَعْرِفُونَ
recognizing
அறிவார்கள்
kullan
كُلًّۢا
all
ஒவ்வொருவரையும்
bisīmāhum
بِسِيمَىٰهُمْۚ
by their marks
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
wanādaw
وَنَادَوْا۟
And they will call out
இன்னும் அழைப்பார்கள்
aṣḥāba l-janati
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
(to the) companions (of) Paradise
சொர்க்கவாசிகளை
an salāmun
أَن سَلَٰمٌ
that "Peace
என்று/ஈடேற்றம்
ʿalaykum
عَلَيْكُمْۚ
(be) upon you"
உங்கள் மீது
lam yadkhulūhā
لَمْ يَدْخُلُوهَا
Not they have entered it
அவர்கள் நுழையவில்லை/அதில்
wahum yaṭmaʿūna
وَهُمْ يَطْمَعُونَ
but they hope
அவர்கள் ஆசைப்படுவார்கள்

Transliteration:

Wa bainahumaa hijaab; wa 'alal A'raafi rijaaluny ya'rifoona kullam biseemaahum; wa naadaw Ashaabal jannati an salaamun 'alaikum; lam yadkhuloohaa wa hum yatma'oon (QS. al-ʾAʿrāf:46)

English Sahih International:

And between them will be a partition [i.e., wall], and on [its] elevations are men who recognize all by their mark. And they call out to the companions of Paradise, "Peace be upon you." They have not [yet] entered it, but they long intensely. (QS. Al-A'raf, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௬)

Jan Trust Foundation

(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். (சொர்க்கத்தின் உயர்ந்த சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பர். (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை “ஈடேற்றம் உங்கள் மீது உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள்: (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்கள் (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்.