குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௪
Qur'an Surah Al-A'raf Verse 44
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَادٰٓى اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ۗقَالُوْا نَعَمْۚ فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَ (الأعراف : ٧)
- wanādā
- وَنَادَىٰٓ
- And will call out
- அழைப்பார்(கள்)
- aṣḥābu l-janati
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
- (the) companions (of) Paradise
- சொர்க்கவாசிகள்
- aṣḥāba l-nāri
- أَصْحَٰبَ ٱلنَّارِ
- (to the) companions (of) the Fire
- நரகவாசிகளை
- an qad wajadnā
- أَن قَدْ وَجَدْنَا
- that "Indeed we found
- என்று/பெற்றுக் கொண்டோம்
- mā waʿadanā
- مَا وَعَدَنَا
- what (had) promised us
- எதை/வாக்களித்தான்/எங்களுக்கு
- rabbunā
- رَبُّنَا
- our Lord
- எங்கள் இறைவன்
- ḥaqqan
- حَقًّا
- true
- உண்மையில்
- fahal wajadttum
- فَهَلْ وَجَدتُّم
- So have you found
- பெற்றீர்களா?
- mā waʿada
- مَّا وَعَدَ
- what (was) promised
- எதை/வாக்களித்தான்
- rabbukum
- رَبُّكُمْ
- (by) your Lord
- உங்கள் இறைவன்
- ḥaqqan
- حَقًّاۖ
- (to be) true?"
- உண்மையில்
- qālū
- قَالُوا۟
- They will say
- கூறுவார்கள்
- naʿam
- نَعَمْۚ
- "Yes"
- ஆம்!
- fa-adhana
- فَأَذَّنَ
- Then will announce
- ஆகவே அறிவிப்பார்
- mu-adhinun
- مُؤَذِّنٌۢ
- an announcer
- ஓர் அறிவிப்பாளர்
- baynahum
- بَيْنَهُمْ
- among them
- அவர்களுக்கு மத்தியில்
- an laʿnatu
- أَن لَّعْنَةُ
- [that] "(The) curse
- நிச்சயமாக சாபம்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- ʿalā l-ẓālimīna
- عَلَى ٱلظَّٰلِمِينَ
- (is) on the wrongdoers
- அநியாயக்காரர்கள் மீது
Transliteration:
Wa naadaa Ashaabul jannati ashaaban Naari an qad wajadnaa maa wa'adannaa Rabbunaa haqqan fahal wajattum maa wa'ada Rabbukum haqqan qaaloo na'am; fa azzana mu'azzinum bainahum al la'natul laahi 'alaz zaalimeen(QS. al-ʾAʿrāf:44)
English Sahih International:
And the companions of Paradise will call out to the companions of the Fire, "We have already found what our Lord promised us to be true. Have you found what your Lord promised to be true?" They will say, "Yes." Then an announcer will announce among them, "The curse of Allah shall be upon the wrongdoers (QS. Al-A'raf, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
(அந்நாளில்) சுவனவாசிகள் நரகவாசிகளை நோக்கி "எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?" என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (பெற்றுக் கொண்டோம்)" என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!" (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௪)
Jan Trust Foundation
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டோம்; உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையில் பெற்றீர்களா?” என்று (கூறி) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்) “ஆம்!” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஓர் அறிவிப்பாளர், “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது நிலவட்டும் என அறிவிப்பார்!”