குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௬
Qur'an Surah Al-A'raf Verse 206
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَيُسَبِّحُوْنَهٗ وَلَهٗ يَسْجُدُوْنَ ࣖ ۩ (الأعراف : ٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ʿinda
- عِندَ
- (are) near
- இடம்
- rabbika
- رَبِّكَ
- your Lord
- உம் இறைவன்
- lā yastakbirūna
- لَا يَسْتَكْبِرُونَ
- not (do) they turn away in pride
- பெருமையடிக்க மாட்டார்கள்
- ʿan ʿibādatihi
- عَنْ عِبَادَتِهِۦ
- from His worship
- அவனை வணங்குவதைவிட்டு
- wayusabbiḥūnahu
- وَيُسَبِّحُونَهُۥ
- And they glorify Him
- இன்னும் துதிப்பார்கள்/அவனை
- walahu
- وَلَهُۥ
- and to Him
- அவனுக்கே
- yasjudūna
- يَسْجُدُونَ۩
- they prostrate
- சிரம் பணிவார்கள்
Transliteration:
Innal lazeena 'inda Rabbika laa yastakbiroona 'an 'ibaadatihee wa yusabbihoonahoo wa lahoo yasjudoon(QS. al-ʾAʿrāf:206)
English Sahih International:
Indeed, those who are near your Lord [i.e., the angels] are not prevented by arrogance from His worship, and they exalt Him, and to Him they prostrate. (QS. Al-A'raf, Ayah ௨௦௬)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நிச்சயமாக உங்கள் இறைவனிடத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் ( மலக்குகள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் "(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்" என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்துகொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௬)
Jan Trust Foundation
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதைவிட்டு பெருமையடிக்க மாட்டார்கள்; அவனை துதிப்பார்கள்; அவனுக்கே சிரம் பணிவார்கள்.