Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௩

Qur'an Surah Al-A'raf Verse 203

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا لَمْ تَأْتِهِمْ بِاٰيَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَيْتَهَاۗ قُلْ اِنَّمَآ اَتَّبِعُ مَا يُوْحٰٓى اِلَيَّ مِنْ رَّبِّيْۗ هٰذَا بَصَاۤىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ (الأعراف : ٧)

wa-idhā lam tatihim
وَإِذَا لَمْ تَأْتِهِم
And when not you bring them
நீர் வரவில்லையென்றால்/அவர்களிடம்
biāyatin
بِـَٔايَةٍ
a Sign
ஒரு வசனத்தைக் கொண்டு
qālū
قَالُوا۟
they say
கூறுகின்றனர்
lawlā ij'tabaytahā
لَوْلَا ٱجْتَبَيْتَهَاۚ
"Why (have) not you devised it?"
நீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?
qul
قُلْ
Say
கூறுவீராக
innamā attabiʿu
إِنَّمَآ أَتَّبِعُ
"Only I follow
நான் பின்பற்றுவதெல்லாம்
mā yūḥā
مَا يُوحَىٰٓ
what is revealed
எதை/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّ
to me
எனக்கு
min rabbī
مِن رَّبِّىۚ
from my Lord
என் இறைவனிடமிருந்து
hādhā
هَٰذَا
This (is)
இவை
baṣāiru
بَصَآئِرُ
enlightenment
தெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள்
min
مِن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
wahudan
وَهُدًى
and guidance
இன்னும் நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌ
and mercy
இன்னும் கருணை
liqawmin yu'minūna
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
for a people who believe"
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்

Transliteration:

Wa izaa lam taatihim bi aayatin qaaloo law lajtabai tahaa; qul innamaaa attabi'u maa yoohaaa ilaiya mir Rabbee; haazaa basaaa'iru mir Rabbikum wa hudanw wa rahmatul liqawminy yu'minoon (QS. al-ʾAʿrāf:203)

English Sahih International:

And when you, [O Muhammad], do not bring them a sign [i.e., miracle], they say, "Why have you not contrived it?" Say, "I only follow what is revealed to me from my Lord. This [Quran] is enlightenment from your Lord and guidance and mercy for a people who believe." (QS. Al-A'raf, Ayah ௨௦௩)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீங்கள் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) "இதனை நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவை களையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௩)

Jan Trust Foundation

நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்|) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: “நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இது உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது நேர்வழியும், (அல்லாஹ்வின்) கருணையுமாகும்.