Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௦

Qur'an Surah Al-A'raf Verse 200

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ (الأعراف : ٧)

wa-immā yanzaghannaka
وَإِمَّا يَنزَغَنَّكَ
And if an evil suggestion comes to you
குழப்பினால்/உம்மை
mina l-shayṭāni
مِنَ ٱلشَّيْطَٰنِ
from [the] Shaitaan
ஷைத்தானிடமிருந்து
nazghun
نَزْغٌ
[an evil suggestion]
ஒரு குழப்பம்
fa-is'taʿidh
فَٱسْتَعِذْ
then seek refuge
பாதுகாப்புக் கோருவீராக
bil-lahi
بِٱللَّهِۚ
in Allah
அல்லாஹ்விடம்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearing
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Wa immaa yanzaghannaka minash Shaitaani nazghun fasta'iz billaah; innahoo Samee'un Aleem (QS. al-ʾAʿrāf:200)

English Sahih International:

And if an evil suggestion comes to you from Satan, then seek refuge in Allah. Indeed, He is Hearing and Knowing. (QS. Al-A'raf, Ayah ௨௦௦)

Abdul Hameed Baqavi:

ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும் படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௦)

Jan Trust Foundation

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஷைத்தானிடமிருந்து ஒரு குழப்பம் (கோபம்) உம்மைக் குழப்பினால் (கோபமூட்டினால்) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.