Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨

Qur'an Surah Al-A'raf Verse 2

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كِتٰبٌ اُنْزِلَ اِلَيْكَ فَلَا يَكُنْ فِيْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ (الأعراف : ٧)

kitābun
كِتَٰبٌ
A Book
ஒரு வேதம்
unzila
أُنزِلَ
revealed
இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
to you
உம் மீது
falā yakun
فَلَا يَكُن
so (let) not be
இருக்க வேண்டாம்
fī ṣadrika
فِى صَدْرِكَ
in your breast
உம் இதயத்தில்
ḥarajun
حَرَجٌ
any uneasiness
நெருக்கடி
min'hu
مِّنْهُ
from it
இதில்
litundhira
لِتُنذِرَ
that you warn
நீர் எச்சரிப்பதற்காக
bihi
بِهِۦ
with it
இதைக் கொண்டு
wadhik'rā
وَذِكْرَىٰ
and a reminder
இன்னும் ஒரு நல்லுபதேசம்
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Kitaabun unzila ilaika falaa yakum fee sadrika harajum minhu litunzira bihee wa zikraa lilmu'mineen (QS. al-ʾAʿrāf:2)

English Sahih International:

[This is] a Book revealed to you, [O Muhammad] – so let there not be in your breast distress therefrom – that you may warn thereby and as a reminder to the believers. (QS. Al-A'raf, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வேதம் உங்கள்மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உங்களுடைய உள்ளங்களில் யாதொரு தயக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீங்கள் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨)

Jan Trust Foundation

(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! இது,) உம் மீது இறக்கப்பட்ட ஒரு வேதமாகும். இதைக் கொண்டு (நீர் மக்களை) எச்சரிப்பதற்கு உம் இதயத்தில் இதில் நெருக்கடி, (சிரமம், சந்தேகம் ஏதும்) இருக்க வேண்டாம். இன்னும், (இது) நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகும்.