குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௫
Qur'an Surah Al-A'raf Verse 195
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَاۗ قُلِ ادْعُوْا شُرَكَاۤءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ (الأعراف : ٧)
- alahum
- أَلَهُمْ
- Are for them
- ?/அவர்களுக்கு
- arjulun
- أَرْجُلٌ
- feet
- கால்கள்
- yamshūna
- يَمْشُونَ
- (to) walk
- நடப்பார்கள்
- bihā
- بِهَآۖ
- with [it]
- அவற்றைக் கொண்டு
- am
- أَمْ
- or
- அல்லது
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- aydin
- أَيْدٍ
- hands
- கைகள்
- yabṭishūna
- يَبْطِشُونَ
- (to) hold
- பிடிப்பார்கள்
- bihā
- بِهَآۖ
- with [it]
- அவற்றைக் கொண்டு
- am
- أَمْ
- or
- அல்லது
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- aʿyunun
- أَعْيُنٌ
- eyes
- கண்கள்
- yub'ṣirūna
- يُبْصِرُونَ
- (to) see
- பார்ப்பார்கள்
- bihā
- بِهَآۖ
- with [it]
- அவற்றைக் கொண்டு
- am
- أَمْ
- or
- அல்லது
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ādhānun
- ءَاذَانٌ
- ears
- காதுகள்
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- (to) hear
- கேட்பார்கள்
- bihā
- بِهَاۗ
- with [it]?
- அவற்றைக் கொண்டு
- quli
- قُلِ
- Say
- கூறுவீராக
- id'ʿū
- ٱدْعُوا۟
- "Call
- பிரார்த்தியுங்கள்
- shurakāakum
- شُرَكَآءَكُمْ
- your partners
- தெய்வங்களிடம் உங்கள்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- kīdūni
- كِيدُونِ
- scheme against me
- எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
- falā tunẓirūni
- فَلَا تُنظِرُونِ
- and (do) not give me respite"
- அவகாசம் அளிக்காதீர்கள்/எனக்கு
Transliteration:
A lahum arjuluny yamshoona bihaa am lahum aidiny yabtishoona bihaaa am lahum a'yunuy yubsiroona bihaaa am lahum aazaanuny yasma'oona bihaa; qulid'oo shurakaaa'akum summa keedooni falaa tunziroon(QS. al-ʾAʿrāf:195)
English Sahih International:
Do they have feet by which they walk? Or do they have hands by which they strike? Or do they have eyes by which they see? Or do they have ears by which they hear? Say, [O Muhammad], "Call your 'partners' and then conspire against me and give me no respite. (QS. Al-A'raf, Ayah ௧௯௫)
Abdul Hameed Baqavi:
(சிலை வணங்குபவர்களே! நீங்கள் வணங்கும்) அவைகளுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு நடக்கின்றனவா? அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) "நீங்கள் இணை வைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு யாதொரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௫)
Jan Trust Foundation
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவர்கள் நடப்பதற்கு அவர்களுக்கு கால்கள் உள்ளனவா?; அல்லது அவர்கள் பிடிப்பதற்கு அவர்களுக்கு கைகள் உள்ளனவா?; அவர்கள் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கண்கள் உள்ளனவா?; அவர்கள் கேட்பதற்கு அவர்களுக்கு காதுகள் உள்ளனவா?; (இவையெல்லாம் அவர்களுக்கு இருக்குமாயின் அந்த) “உங்கள் தெய்வங்களிடம் பிரார்த்தித்து பிறகு, எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நபியே!) கூறுவீராக.