Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௪

Qur'an Surah Al-A'raf Verse 194

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الأعراف : ٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those whom
எவர்கள்
tadʿūna
تَدْعُونَ
you call
பிரார்த்திக்கிறீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
from besides Allah
அல்லாஹ்வையன்றி
ʿibādun
عِبَادٌ
(are) slaves
அடிமைகள்
amthālukum
أَمْثَالُكُمْۖ
like you
உங்களைப் போன்ற
fa-id'ʿūhum
فَٱدْعُوهُمْ
So invoke them
பிரார்த்தியுங்கள் அவர்களிடம்
falyastajībū
فَلْيَسْتَجِيبُوا۟
and let them respond
அவர்கள் பதிலளிக்கட்டும்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful
உண்மையாளர்களாக

Transliteration:

Innal lazeena tad'oona min doonil laahi 'ibaadun amsaalukum fad'oohum fal yastajeeboo lakum in kuntum saadiqeen (QS. al-ʾAʿrāf:194)

English Sahih International:

Indeed, those you [polytheists] call upon besides Allah are servants [i.e., creations] like you. So call upon them and let them respond to you, if you should be truthful. (QS. Al-A'raf, Ayah ௧௯௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்! (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௪)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திப்பவர்கள் உங்களைப் போன்ற அடிமைகள் ஆவர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!