Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௯

Qur'an Surah Al-A'raf Verse 189

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ هُوَ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ اِلَيْهَاۚ فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهٖ ۚفَلَمَّآ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَيْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ (الأعراف : ٧)

huwa
هُوَ
He
அவன்
alladhī
ٱلَّذِى
(is) the One Who
எவன்
khalaqakum
خَلَقَكُم
created you
உங்களைப் படைத்தான்
min
مِّن
from
இருந்து
nafsin
نَّفْسٍ
a soul
ஒரு மனிதர்
wāḥidatin
وَٰحِدَةٍ
single
ஒரே
wajaʿala
وَجَعَلَ
and made
இன்னும் உருவாக்கினான்
min'hā
مِنْهَا
from it
இன்னும் அவரிலிருந்தே
zawjahā
زَوْجَهَا
its mate
அவருடைய மனைவியை
liyaskuna
لِيَسْكُنَ
that he might live
அவர் வசிப்பதற்காக, நிம்மதி பெறுவதற்காக
ilayhā
إِلَيْهَاۖ
with her
அவளுடன்
falammā
فَلَمَّا
And when
எப்போது
taghashāhā
تَغَشَّىٰهَا
he covers her
மூடினார்/அவளை
ḥamalat
حَمَلَتْ
she carries
கர்ப்பமானாள்
ḥamlan
حَمْلًا
a burden
கர்ப்பம்
khafīfan
خَفِيفًا
light
லேசான
famarrat
فَمَرَّتْ
and continues
நடந்தாள்
bihi
بِهِۦۖ
with it
அதைக் கொண்டு
falammā athqalat
فَلَمَّآ أَثْقَلَت
But when she grows heavy
போது/கனமானாள்
daʿawā
دَّعَوَا
they both invoke
இருவரும் பிரார்த்தித்தனர்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விடம்
rabbahumā
رَبَّهُمَا
their Lord
அவ்விருவரின் இறைவனை
la-in ātaytanā
لَئِنْ ءَاتَيْتَنَا
"If You give us
நீ கொடுத்தால்/எங்களுக்கு
ṣāliḥan
صَٰلِحًا
a righteous (child)
நல்ல குழந்தையை
lanakūnanna
لَّنَكُونَنَّ
surely we will be
நிச்சயமாக ஆகிவிடுவோம்
mina l-shākirīna
مِنَ ٱلشَّٰكِرِينَ
among the thankful"
நன்றிசெலுத்துவோரில்

Transliteration:

Huwal lazee khalaqakum min nafsinw waahidatinw wa ja'ala minhaa zawjahaa liyas kuna ilaihaa falammaa taghash shaahaa hamalat hamlan khafeefan famarrat bihee falammaaa asqalad da'awal laaha Rabbahumaa la'in aayaitanaa saalihal lanakoo nanna minash shaakireen (QS. al-ʾAʿrāf:189)

English Sahih International:

It is He who created you from one soul and created from it its mate that he might dwell in security with her. And when he [i.e., man] covers her, she carries a light burden [i.e., a pregnancy] and continues therein. And when it becomes heavy, they both invoke Allah, their Lord, "If You should give us a good [child], we will surely be among the grateful." (QS. Al-A'raf, Ayah ௧௮௯)

Abdul Hameed Baqavi:

ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதனை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்" என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௯)

Jan Trust Foundation

அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான்; அவர் அவளுடன் வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரி(ன் உடம்பி)லிருந்தே உருவாக்கினான். அவளை அவர் (தன் உடலால்) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமாக கர்ப்பமானாள். அதை(ச் சுமந்து) கொண்டு நடந்தாள். அவள் (கர்ப்பம்) கனத்தபோது அவ்விருவரின் இறைவனான அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தனர்: “நீ எங்களுக்கு நல்ல குழந்தையைக் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றிசெலுத்துவோரில் ஆகிவிடுவோம்.”