Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௭௫

Qur'an Surah Al-A'raf Verse 175

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ الَّذِيْٓ اٰتَيْنٰهُ اٰيٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّيْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِيْنَ (الأعراف : ٧)

wa-ut'lu
وَٱتْلُ
And recite
ஓதிக் காட்டுவீராக
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
naba-a
نَبَأَ
(the) story
செய்தியை
alladhī
ٱلَّذِىٓ
(of the) one whom
எவன்
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
We gave [him]
கொடுத்தோம்/அவனுக்கு
āyātinā
ءَايَٰتِنَا
Our Verses
நம் அத்தாட்சிகளை
fa-insalakha
فَٱنسَلَخَ
but he detached
கழண்டான்
min'hā
مِنْهَا
[from] them
அதிலிருந்து
fa-atbaʿahu
فَأَتْبَعَهُ
so followed him
பின்தொடர்ந்தான்/அவனை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
fakāna
فَكَانَ
and he became
ஆகிவிட்டான்
mina l-ghāwīna
مِنَ ٱلْغَاوِينَ
of those gone astray
வழிகெட்டவர்களில்

Transliteration:

Watlu 'alaihim naba allazeee aatainaahu Aayaatinaa fansalakha minhaa fa atba'a hush Shaytaano fakaana minal ghaaween (QS. al-ʾAʿrāf:175)

English Sahih International:

And recite to them, [O Muhammad], the news of him to whom We gave [knowledge of] Our signs, but he detached himself from them; so Satan pursued him, and he became of the deviators. (QS. Al-A'raf, Ayah ௧௭௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் அவர்களுக்கு ("பல்ஆம் இப்னு பாஊர்" என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் "(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௭௫)

Jan Trust Foundation

(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை கொடுத்தவனுடைய செய்தியை அவர்கள் மீது ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் வழிகெட்டவர்களில் ஆகிவிட்டான்.