குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௭௧
Qur'an Surah Al-A'raf Verse 171
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْٓا اَنَّهٗ وَاقِعٌۢ بِهِمْۚ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ࣖ (الأعراف : ٧)
- wa-idh nataqnā
- وَإِذْ نَتَقْنَا
- And when We raised
- சமயம்/பிடுங்கினோம்
- l-jabala
- ٱلْجَبَلَ
- the mountain
- மலையை
- fawqahum
- فَوْقَهُمْ
- above them
- அவர்களுக்கு மேல்
- ka-annahu
- كَأَنَّهُۥ
- as if it was
- போன்று/அது
- ẓullatun
- ظُلَّةٌ
- a canopy
- நிழலிடும் மேகம்
- waẓannū
- وَظَنُّوٓا۟
- and they thought
- இன்னும் எண்ணினர்
- annahu
- أَنَّهُۥ
- that it
- நிச்சயமாக அது
- wāqiʿun
- وَاقِعٌۢ
- (would) fall
- விழுந்துவிடும்
- bihim
- بِهِمْ
- upon them
- அவர்கள் மீது
- khudhū
- خُذُوا۟
- (We said) Take
- பிடியுங்கள்
- mā ātaynākum
- مَآ ءَاتَيْنَٰكُم
- what We have given you
- எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
- biquwwatin
- بِقُوَّةٍ
- with strength
- பலமாக
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- and remember
- இன்னும் நினைவு கூருங்கள்
- mā fīhi
- مَا فِيهِ
- what (is) in it
- எது/அதில்
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- so that you may fear Allah"
- நீங்கள் அஞ்சுவதற்காக
Transliteration:
Wa iz nataqnal jabala fawqahum ka annahoo zullatunw wa zannooo annahoo waaqi'um bihim khuzoo maaa aatainaakum biquwwatinw wazkuroo maa feehi la'allakum tattaqoon(QS. al-ʾAʿrāf:171)
English Sahih International:
And [mention] when We raised the mountain above them as if it was a dark cloud and they were certain that it would fall upon them, [and Allah said], "Take what We have given you with determination and remember what is in it that you might fear Allah." (QS. Al-A'raf, Ayah ௧௭௧)
Abdul Hameed Baqavi:
தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக் கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப் போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாகி விடலாம்" (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௭௧)
Jan Trust Foundation
நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு மேல் மலையை - அது நிழலிடும் மேகத்தைப் போன்று - பிடுங்கி (நிறுத்தி)ய சமயத்தை நினைவு கூருவீராக. நிச்சயமாக அது அவர்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள்” (என்று நாம் அவர்களிடம் வாக்குறுதி எடுத்தோம்).