Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௫

Qur'an Surah Al-A'raf Verse 155

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚفَلَمَّآ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّايَۗ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَاۤءُ مِنَّاۚ اِنْ هِيَ اِلَّا فِتْنَتُكَۗ تُضِلُّ بِهَا مَنْ تَشَاۤءُ وَتَهْدِيْ مَنْ تَشَاۤءُۗ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ (الأعراف : ٧)

wa-ikh'tāra
وَٱخْتَارَ
And chose
தேர்ந்தெடுத்தார்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
qawmahu
قَوْمَهُۥ
(from) his people
தன் சமுதாயத்தில்
sabʿīna
سَبْعِينَ
seventy
எழுபது
rajulan
رَجُلًا
men
ஆண்களை
limīqātinā
لِّمِيقَٰتِنَاۖ
for Our appointment
நம் குறிப்பிட்ட நேரத்திற்கு
falammā
فَلَمَّآ
Then when
போது
akhadhathumu
أَخَذَتْهُمُ
seized them
பிடித்தது/அவர்களை
l-rajfatu
ٱلرَّجْفَةُ
the earthquake
இடிமுழக்கம்
qāla
قَالَ
he said
கூறினார்
rabbi
رَبِّ
"O my Lord!
என் இறைவா
law shi'ta
لَوْ شِئْتَ
If you (had) willed
நீ நாடியிருந்தால்
ahlaktahum
أَهْلَكْتَهُم
You (could) have destroyed them
அழித்திருப்பாய்/அவர்களை
min qablu
مِّن قَبْلُ
from before
(இதற்கு) முன்னரே
wa-iyyāya
وَإِيَّٰىَۖ
and me
இன்னும் என்னை
atuh'likunā
أَتُهْلِكُنَا
Would You destroy us
அழிப்பாயா/எங்களை
bimā faʿala
بِمَا فَعَلَ
for what did
செய்ததற்காக
l-sufahāu
ٱلسُّفَهَآءُ
the foolish
அறிவீனர்கள்
minnā
مِنَّآۖ
among us?
எங்களில்
in hiya
إِنْ هِىَ
Not it (was)
இல்லை/இது
illā
إِلَّا
but
தவிர
fit'natuka
فِتْنَتُكَ
Your trial
உன் சோதனையே
tuḍillu
تُضِلُّ
You let go astray
வழிகெடுக்கிறாய்
bihā
بِهَا
by it
இதைக் கொண்டு
man
مَن
whom
எவரை
tashāu
تَشَآءُ
You will
நாடுகிறாய்
watahdī
وَتَهْدِى
and You guide
இன்னும் நேர்வழி செலுத்துகிறாய்
man
مَن
whom
எவரை
tashāu
تَشَآءُۖ
You will
நாடுகிறாய்
anta
أَنتَ
You
நீ
waliyyunā
وَلِيُّنَا
(are) our Protector
எங்கள் பாதுகாவலன்
fa-igh'fir lanā
فَٱغْفِرْ لَنَا
so forgive us
ஆகவே மன்னிப்பு வழங்கு/எங்களுக்கு
wa-ir'ḥamnā
وَٱرْحَمْنَاۖ
and have mercy upon us
கருணைபுரி/எங்களுக்கு
wa-anta khayru
وَأَنتَ خَيْرُ
and You (are) Best
நீ மிகச் சிறந்தவன்
l-ghāfirīna
ٱلْغَٰفِرِينَ
(of) Forgivers
மன்னிப்பவர்களில்

Transliteration:

Wakhtaara Moosaa qawmahoo sab'eena rajjulal limeeqaatinaa falammaa akhazat humur rajfatu qaala Rabbi law shi'ta ahlaktahum min qablu wa iyyaaya atuhlikunna bimaa fa'alas sufahaaa'u minnaa in hiya illaa fitnatuka tudillu bihaa man tashaaa'u wa tahdee man tashaaa'u Anta waliyyunaa faghfir lanaa warhammnnaa wa Anta khairul ghaafireen (QS. al-ʾAʿrāf:155)

English Sahih International:

And Moses chose from his people seventy men for Our appointment. And when the earthquake seized them, he said, "My Lord, if You had willed, You could have destroyed them before and me [as well]. Would You destroy us for what the foolish among us have done? This is not but Your trial by which You send astray whom You will and guide whom You will. You are our Protector, so forgive us and have mercy upon us; and You are the best of forgivers. (QS. Al-A'raf, Ayah ௧௫௫)

Abdul Hameed Baqavi:

மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் "தூர்" என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாமே. எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை. இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்களுடைய இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்" என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫௫)

Jan Trust Foundation

இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் குறிப்பிட்ட நேரத்திற்கு மூஸா தன் சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை இடிமுழக்கம் பிடித்தபோது, “என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்னரே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் அறிவீனர்கள் செய்ததற்காக எங்களை அழிப்பாயா? உன் சோதனையே தவிர இது வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி கெடுக்கிறாய்; நீ நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறாய். நீ எங்கள் பாதுகாவலன். ஆகவே, நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! எங்களுக்கு கருணை புரி! மன்னிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.”