Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௩

Qur'an Surah Al-A'raf Verse 153

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِهَا وَاٰمَنُوْٓا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ (الأعراف : ٧)

wa-alladhīna ʿamilū
وَٱلَّذِينَ عَمِلُوا۟
And those who do
எவர்கள்/செய்தனர்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
the evil deeds
தீமைகளை
thumma
ثُمَّ
then
பிறகு
tābū
تَابُوا۟
repented
திருந்தி திரும்பினர்
min baʿdihā
مِنۢ بَعْدِهَا
from after that
அவற்றுக்குப் பின்னர்
waāmanū
وَءَامَنُوٓا۟
and believed
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
inna rabbaka
إِنَّ رَبَّكَ
indeed your Lord
நிச்சயமாக உம் இறைவன்
min baʿdihā
مِنۢ بَعْدِهَا
from after that
அதற்குப் பின்னர்
laghafūrun
لَغَفُورٌ
(is) surely Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Wallazeena 'amilus saiyiaati summa taaboo mim ba'dihaa wa aamanooo inna Rabbaka mim ba'dihaa la Ghafoorur Raheem (QS. al-ʾAʿrāf:153)

English Sahih International:

But those who committed misdeeds and then repented after them and believed – indeed your Lord, thereafter, is Forgiving and Merciful. (QS. Al-A'raf, Ayah ௧௫௩)

Abdul Hameed Baqavi:

(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர் களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ (அவர்களின் பாவத்தை,) அதற்குப் பின்னர் நிச்சயமாக உங்கள் இறைவன் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫௩)

Jan Trust Foundation

ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தீமைகளை செய்து, பிறகு, அவற்றுக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (பாவமன்னிப்புக் கோரி,) நம்பிக்கை கொண்டவர்கள் (நிச்சயம் மன்னிப்பு பெறுவார்கள். ஏனெனில்) நிச்சயமாக உம் இறைவன் அதற்குப் பின்னர் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.