குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௦
Qur'an Surah Al-A'raf Verse 140
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعٰلَمِيْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- aghayra
- أَغَيْرَ
- "Should other than
- அல்லாததையா?
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- abghīkum
- أَبْغِيكُمْ
- I seek for you
- தேடுவேன்/ உங்களுக்கு
- ilāhan
- إِلَٰهًا
- a god
- வணங்கப்படும் ஒரு கடவுளாக
- wahuwa
- وَهُوَ
- while He
- அவனோ
- faḍḍalakum
- فَضَّلَكُمْ
- has preferred you
- மேன்மைப்படுத்தினான்/உங்களை
- ʿalā l-ʿālamīna
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- over the worlds?"
- உலகத்தார்களைப் பார்க்கிலும்
Transliteration:
Qaala a-ghairal laahi abgheekum ilaahanw wa Huwa faddalakum 'alal 'aalameen(QS. al-ʾAʿrāf:140)
English Sahih International:
He said, "Is it other than Allah I should desire for you as a god while He has preferred you over the worlds?" (QS. Al-A'raf, Ayah ௧௪௦)
Abdul Hameed Baqavi:
(தவிர) "அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கி வைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்" என்றும் அவர் கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௦)
Jan Trust Foundation
“அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு வணங்கப்படும் ஒரு கடவுளாகத் தேடுவேன்? அவனோ உலகத்தார்களைப் பார்க்கிலும் உங்களை மேன்மைப்படுத்தினான்” என்று (மூஸா) கூறினார்.