Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௫

Qur'an Surah Al-A'raf Verse 105

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَقِيْقٌ عَلٰٓى اَنْ لَّآ اَقُوْلَ عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّۗ قَدْ جِئْتُكُمْ بِبَيِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِيَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ (الأعراف : ٧)

ḥaqīqun
حَقِيقٌ
Obligated
பேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன்
ʿalā an lā aqūla
عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ
on that not I say
நான் கூறாமலிருப்பதற்கு
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
about Allah
அல்லாஹ்வின் மீது
illā l-ḥaqa
إِلَّا ٱلْحَقَّۚ
except the truth
உண்மையைத் தவிர
qad ji'tukum
قَدْ جِئْتُكُم
Verily I (have) come to you
வந்துவிட்டேன்/உங்களிடம்
bibayyinatin
بِبَيِّنَةٍ
with a clear Sign
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
min rabbikum
مِّن رَّبِّكُمْ
from your Lord
உங்கள் இறைவனிடமிருந்து
fa-arsil
فَأَرْسِلْ
so send
ஆகவே அனுப்பிவை
maʿiya
مَعِىَ
with me
என்னுடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children (of) Israel"
இஸ்ரவேலர்களை

Transliteration:

Haqeequn 'alaaa al laaa aqoola 'alal laahi illal haqq; qad ji'tukum bibaiyinatim mir Rabbikum fa arsil ma'iya Baneee Israaa'eel (QS. al-ʾAʿrāf:105)

English Sahih International:

[Who is] obligated not to say about Allah except the truth. I have come to you with clear evidence from your Lord, so send with me the Children of Israel." (QS. Al-A'raf, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

(அன்றி,) "நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆதலால் (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) நான் கூறாமலிருப்பதற்கு (நான்) பேராசை உள்ளவன். உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை திட்டமாக உங்களிடம் கொண்டு வந்துவிட்டேன். ஆகவே, இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை.” (என்றும் மூஸா கூறினார்.)