اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَۖ ١٩١
- ayush'rikūna
- أَيُشْرِكُونَ
- இணையாக்குகிறார்களா?
- mā
- مَا
- எவர்களை
- lā yakhluqu
- لَا يَخْلُقُ
- படைக்கமாட்டார்(கள்)
- shayan
- شَيْـًٔا
- எந்த ஒரு பொருளையும்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- yukh'laqūna
- يُخْلَقُونَ
- படைக்கப்படுகிறார்கள்
யாதொரு பொருளையும் படைக்க சக்தியற்றவைகளை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவைகளும் (அவனால்) படைக்கப்பட்டவைதான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௧)Tafseer
وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَآ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ ١٩٢
- walā yastaṭīʿūna
- وَلَا يَسْتَطِيعُونَ
- இயலமாட்டார்கள்
- lahum
- لَهُمْ
- இவர்களுக்கு
- naṣran
- نَصْرًا
- உதவி செய்ய
- walā anfusahum yanṣurūna
- وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
- இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்
அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௨)Tafseer
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَتَّبِعُوْكُمْۗ سَوَۤاءٌ عَلَيْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ١٩٣
- wa-in
- وَإِن
- நீங்கள் அழைத்தால்
- tadʿūhum
- تَدْعُوهُمْ
- நீங்கள் அழைத்தால் அவர்களை
- ilā l-hudā
- إِلَى ٱلْهُدَىٰ
- நேர்வழிக்கு
- lā
- لَا
- பின்பற்ற மாட்டார்கள்
- yattabiʿūkum
- يَتَّبِعُوكُمْۚ
- பின்பற்ற மாட்டார்கள் உங்களை
- sawāon
- سَوَآءٌ
- சமம்தான்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- adaʿawtumūhum
- أَدَعَوْتُمُوهُمْ
- நீங்கள் அழைத்தாலும் அவர்களை
- am
- أَمْ
- அல்லது
- antum
- أَنتُمْ
- நீங்கள்
- ṣāmitūna
- صَٰمِتُونَ
- வாய்மூடியவர்களாக
நீங்கள் அவைகளை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவைகள் பின்பற்றாது. நீங்கள் அவைகளை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௩)Tafseer
اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٩٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- tadʿūna
- تَدْعُونَ
- பிரார்த்திக்கிறீர்கள்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- ʿibādun
- عِبَادٌ
- அடிமைகள்
- amthālukum
- أَمْثَالُكُمْۖ
- உங்களைப் போன்ற
- fa-id'ʿūhum
- فَٱدْعُوهُمْ
- பிரார்த்தியுங்கள் அவர்களிடம்
- falyastajībū
- فَلْيَسْتَجِيبُوا۟
- அவர்கள் பதிலளிக்கட்டும்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௪)Tafseer
اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَاۗ قُلِ ادْعُوْا شُرَكَاۤءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ١٩٥
- alahum
- أَلَهُمْ
- ?/அவர்களுக்கு
- arjulun
- أَرْجُلٌ
- கால்கள்
- yamshūna
- يَمْشُونَ
- நடப்பார்கள்
- bihā
- بِهَآۖ
- அவற்றைக் கொண்டு
- am
- أَمْ
- அல்லது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- aydin
- أَيْدٍ
- கைகள்
- yabṭishūna
- يَبْطِشُونَ
- பிடிப்பார்கள்
- bihā
- بِهَآۖ
- அவற்றைக் கொண்டு
- am
- أَمْ
- அல்லது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- aʿyunun
- أَعْيُنٌ
- கண்கள்
- yub'ṣirūna
- يُبْصِرُونَ
- பார்ப்பார்கள்
- bihā
- بِهَآۖ
- அவற்றைக் கொண்டு
- am
- أَمْ
- அல்லது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ādhānun
- ءَاذَانٌ
- காதுகள்
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- கேட்பார்கள்
- bihā
- بِهَاۗ
- அவற்றைக் கொண்டு
- quli
- قُلِ
- கூறுவீராக
- id'ʿū
- ٱدْعُوا۟
- பிரார்த்தியுங்கள்
- shurakāakum
- شُرَكَآءَكُمْ
- தெய்வங்களிடம் உங்கள்
- thumma
- ثُمَّ
- பிறகு
- kīdūni
- كِيدُونِ
- எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
- falā tunẓirūni
- فَلَا تُنظِرُونِ
- அவகாசம் அளிக்காதீர்கள்/எனக்கு
(சிலை வணங்குபவர்களே! நீங்கள் வணங்கும்) அவைகளுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு நடக்கின்றனவா? அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) "நீங்கள் இணை வைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு யாதொரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௫)Tafseer
اِنَّ وَلِيِّ َۧ اللّٰهُ الَّذِيْ نَزَّلَ الْكِتٰبَۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ ١٩٦
- inna waliyyiya
- إِنَّ وَلِۦِّىَ
- நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhī nazzala
- ٱلَّذِى نَزَّلَ
- எவன்/இறக்கினான்
- l-kitāba
- ٱلْكِتَٰبَۖ
- வேதத்தை
- wahuwa
- وَهُوَ
- அவன்
- yatawallā
- يَتَوَلَّى
- பொறுப்பேற்கிறான்
- l-ṣāliḥīna
- ٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களுக்கு
(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௬)Tafseer
وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَكُمْ وَلَآ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ ١٩٧
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்களிடம்
- tadʿūna
- تَدْعُونَ
- பிரார்த்திக்கிறீர்கள்
- min dūnihi
- مِن دُونِهِۦ
- அவனையன்றி
- lā yastaṭīʿūna
- لَا يَسْتَطِيعُونَ
- இயலமாட்டார்கள்
- naṣrakum
- نَصْرَكُمْ
- உங்களுக்கு உதவி செய்ய
- walā anfusahum yanṣurūna
- وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
- இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வையன்றி எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவைகளாக இருப்பதுடன், தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவைகளாக இருக்கின்றன. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௭)Tafseer
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَسْمَعُوْاۗ وَتَرٰىهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُوْنَ ١٩٨
- wa-in
- وَإِن
- நீர் அழைத்தால்
- tadʿūhum
- تَدْعُوهُمْ
- நீர் அழைத்தால் அவர்களை
- ilā l-hudā
- إِلَى ٱلْهُدَىٰ
- நேர்வழிக்கு
- lā yasmaʿū
- لَا يَسْمَعُوا۟ۖ
- செவியுறமாட்டார்கள்
- watarāhum
- وَتَرَىٰهُمْ
- நீர் காண்கிறீர்/அவர்களை
- yanẓurūna
- يَنظُرُونَ
- அவர்கள் பார்ப்பவர்களாக
- ilayka
- إِلَيْكَ
- உம்மை
- wahum
- وَهُمْ
- அவர்களோ
- lā yub'ṣirūna
- لَا يُبْصِرُونَ
- பார்க்க மாட்டார்கள்
நீங்கள் அவைகளை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உங்களைப் பார்ப்பதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை உங்களைப் பார்ப்பதே இல்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௮)Tafseer
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجَاهِلِيْنَ ١٩٩
- khudhi
- خُذِ
- பற்றிப் பிடிப்பீராக
- l-ʿafwa
- ٱلْعَفْوَ
- மன்னிப்பை
- wamur
- وَأْمُرْ
- இன்னும் ஏவுவீராக
- bil-ʿur'fi
- بِٱلْعُرْفِ
- நன்மையைக்கொண்டு
- wa-aʿriḍ
- وَأَعْرِضْ
- இன்னும் புறக்கணிப்பீராக
- ʿani l-jāhilīna
- عَنِ ٱلْجَٰهِلِينَ
- அறியாதவர்களை
(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௯)Tafseer
وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ ٢٠٠
- wa-immā yanzaghannaka
- وَإِمَّا يَنزَغَنَّكَ
- குழப்பினால்/உம்மை
- mina l-shayṭāni
- مِنَ ٱلشَّيْطَٰنِ
- ஷைத்தானிடமிருந்து
- nazghun
- نَزْغٌ
- ஒரு குழப்பம்
- fa-is'taʿidh
- فَٱسْتَعِذْ
- பாதுகாப்புக் கோருவீராக
- bil-lahi
- بِٱللَّهِۚ
- அல்லாஹ்விடம்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும் படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௦)Tafseer