குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௫
Qur'an Surah Al-An'am Verse 95
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰىۗ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ۗذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰى تُؤْفَكُوْنَ (الأنعام : ٦)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- fāliqu
- فَالِقُ
- (is the) Cleaver
- பிளப்பவன்
- l-ḥabi
- ٱلْحَبِّ
- (of) the grain
- வித்தை
- wal-nawā
- وَٱلنَّوَىٰۖ
- and the date-seed
- இன்னும் கொட்டையை
- yukh'riju
- يُخْرِجُ
- He brings forth
- வெளியாக்குகிறான்
- l-ḥaya
- ٱلْحَىَّ
- the living
- உயிருள்ளதை
- mina
- مِنَ
- from
- இருந்து
- l-mayiti
- ٱلْمَيِّتِ
- the dead
- இறந்தது
- wamukh'riju
- وَمُخْرِجُ
- and brings forth
- இன்னும் வெளியாக்குபவன்
- l-mayiti
- ٱلْمَيِّتِ
- the dead
- இறந்ததை
- mina
- مِنَ
- from
- இருந்து
- l-ḥayi
- ٱلْحَىِّۚ
- the living
- உயிருள்ளது
- dhālikumu
- ذَٰلِكُمُ
- That
- அவன்தான்
- l-lahu
- ٱللَّهُۖ
- (is) Allah
- அல்லாஹ்
- fa-annā
- فَأَنَّىٰ
- so how
- எங்கு?
- tu'fakūna
- تُؤْفَكُونَ
- are you deluded?
- திருப்பப்படுகிறீர்கள்
Transliteration:
Innal laaha faaliqul habbi wannawaa yukhrijul haiya minal maiyiti wa mukhrijul maiyiti minal haiy; zaalikumul laahu fa annaa tu'fakoon(QS. al-ʾAnʿām:95)
English Sahih International:
Indeed, Allah is the cleaver of grain and date seeds. He brings the living out of the dead and brings the dead out of the living. That is Allah; so how are you deluded? (QS. Al-An'am, Ayah ௯௫)
Abdul Hameed Baqavi:
வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் அவனே வெளியாக்குகின்றான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்? (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௯௫)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ் வித்துகளையும், கொட்டைகளையும் பிளப்பவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறான்; உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறான்; அவன்தான் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?