Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௪

Qur'an Surah Al-An'am Verse 84

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَۗ كُلًّا هَدَيْنَا وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَهٰرُوْنَ ۗوَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ (الأنعام : ٦)

wawahabnā
وَوَهَبْنَا
And We bestowed
இன்னும் வழங்கினோம்
lahu
لَهُۥٓ
to him
அவருக்கு
is'ḥāqa
إِسْحَٰقَ
Ishaq
இஸ்ஹாக்கை
wayaʿqūba
وَيَعْقُوبَۚ
and Yaqub
இன்னும் யஃகூபை
kullan
كُلًّا
all
எல்லோரையும்
hadaynā
هَدَيْنَاۚ
We guided
நேர்வழி செலுத்தினோம்
wanūḥan
وَنُوحًا
And Nuh
இன்னும் நூஹை
hadaynā
هَدَيْنَا
We guided
நேர்வழி செலுத்தினோம்
min qablu
مِن قَبْلُۖ
from before
இதற்கு முன்னர்
wamin
وَمِن
and of
இன்னும் இருந்து
dhurriyyatihi
ذُرِّيَّتِهِۦ
his descendents
அவருடைய சந்ததி
dāwūda
دَاوُۥدَ
Dawood
தாவூதை
wasulaymāna
وَسُلَيْمَٰنَ
and Sulaiman
இன்னும் ஸுலைமானை
wa-ayyūba
وَأَيُّوبَ
and Ayub
இன்னும் அய்யூபை
wayūsufa
وَيُوسُفَ
and Yusuf
இன்னும் யூஸýஃபை
wamūsā
وَمُوسَىٰ
and Musa
இன்னும் மூஸாவை
wahārūna
وَهَٰرُونَۚ
and Harun
இன்னும் ஹறாரூனை
wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இவ்வாறே
najzī
نَجْزِى
We reward
கூலிகொடுக்கிறோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லறம்புரிவோருக்கு

Transliteration:

Wa wahabnaa lahoo ishaaqa wa ya'qoob; kullan hadainaa; wa Noohan hadainaa min qablu wa min zurriyyatihee Daawooda wa Sulaimaana wa Ayyooba wa Yoosufa wa Moosaa wa haaroon; wa kazaalika najzil muhsineen (QS. al-ʾAnʿām:84)

English Sahih International:

And We gave to him [i.e., Abraham] Isaac and Jacob – all [of them] We guided. And Noah, We guided before; and among his descendants, David and Solomon and Job and Joseph and Moses and Aaron. Thus do We reward the doers of good. (QS. Al-An'am, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஃகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்) கூலி அளிக்கின்றோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௪)

Jan Trust Foundation

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி செலுத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம்.