Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௩

Qur'an Surah Al-An'am Verse 83

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتِلْكَ حُجَّتُنَآ اٰتَيْنٰهَآ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖۗ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَاۤءُۗ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ (الأنعام : ٦)

watil'ka
وَتِلْكَ
And this
இவை
ḥujjatunā
حُجَّتُنَآ
(is) Our argument
நம் சான்று
ātaynāhā
ءَاتَيْنَٰهَآ
We gave it
கொடுத்தோம்/அவற்றை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(to) Ibrahim
இப்றாஹீமுக்கு
ʿalā
عَلَىٰ
against
எதிராக
qawmihi
قَوْمِهِۦۚ
his people
அவருடைய சமுதாயம்
narfaʿu
نَرْفَعُ
We raise
உயர்த்துகிறோம்
darajātin
دَرَجَٰتٍ
(by) degrees
பதவிகளால்
man
مَّن
whom
எவரை
nashāu
نَّشَآءُۗ
We will
நாடுகிறோம்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவன்
ḥakīmun
حَكِيمٌ
(is) All-Wise
ஞானவான்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Wa tilka hujjatunaaa aatainaahaaa Ibraaheema 'alaa qawmih; narfa'u darajaatim man nashaaa'; inna Rabbaka Hakeemun 'Aleem (QS. al-ʾAnʿām:83)

English Sahih International:

And that was Our [conclusive] argument which We gave Abraham against his people. We raise by degrees whom We will. Indeed, your Lord is Wise and Knowing. (QS. Al-An'am, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(மேற்கூறப்பட்ட) இவை நம்முடைய உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்ராஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவைகளை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவியை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகின்றோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக ஞானமுடையவனாகவும், மிகுந்த அறிவுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௩)

Jan Trust Foundation

இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை நம் சான்றாகும். அவற்றை அவருடைய சமுதாயத்திற்கு எதிராக இப்றாஹீமுக்கு கொடுத்தோம். நாம் நாடியவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம்.(நபியே!) நிச்சயமாக உம் இறைவன் ஞானவான்,நன்கறிபவன்.