Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௪

Qur'an Surah Al-An'am Verse 74

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚاِنِّيْٓ اَرٰىكَ وَقَوْمَكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الأنعام : ٦)

wa-idh qāla
وَإِذْ قَالَ
And when said
கூறிய சமயத்தை
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
Ibrahim
இப்றாஹீம்
li-abīhi
لِأَبِيهِ
to his father
தன் தந்தைக்கு
āzara
ءَازَرَ
Aazar
ஆஸர்
atattakhidhu
أَتَتَّخِذُ
"Do you take
எடுத்துக்கொள்கிறீரா?
aṣnāman
أَصْنَامًا
idols
சிலைகளை
ālihatan
ءَالِهَةًۖ
(as) gods?
வணங்கப்படும் தெய்வங்களாக
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
arāka
أَرَىٰكَ
[I] see you
காண்கிறேன்/உம்மை
waqawmaka
وَقَوْمَكَ
and your people
இன்னும் உம் சமுதாயம்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in error
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
manifest"
தெளிவானது

Transliteration:

Wa iz qaala Ibraaheemu li abeehi Aazara a-tattakhizu asnaaman aalihatan inneee araaka wa qawmaka fee dalaalim mmubeen (QS. al-ʾAnʿām:74)

English Sahih International:

And [mention, O Muhammad], when Abraham said to his father Azar, "Do you take idols as deities? Indeed, I see you and your people to be in manifest error." (QS. Al-An'am, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி "நீங்கள் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டு "நிச்சயமாக நீங்களும் உங்களுடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௪)

Jan Trust Foundation

இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்றாஹீம் தன் தந்தை ஆஸருக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! "நீர் சிலைகளை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக்கொள்கிறீரா?" "நிச்சயமாக நான் உம்மையும் உம் சமுதாயத்தையும் தெளிவான வழிகேட்டில் காண்கிறேன்."