Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௭

Qur'an Surah Al-An'am Verse 57

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنِّيْ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَكَذَّبْتُمْ بِهٖۗ مَا عِنْدِيْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗيَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِيْنَ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
innī
إِنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
ʿalā
عَلَىٰ
on
மீது
bayyinatin
بَيِّنَةٍ
clear proof
ஓர் அத்தாட்சி
min rabbī
مِّن رَّبِّى
from my Lord
என் இறைவனின்
wakadhabtum
وَكَذَّبْتُم
while you deny
இன்னும் பொய்ப்பித்தீர்கள்
bihi
بِهِۦۚ
[with] it
அவனை
mā ʿindī
مَا عِندِى
Not I have
இல்லை/என்னிடம்
مَا
what
எது
tastaʿjilūna
تَسْتَعْجِلُونَ
you seek to hasten
அவசரப்படுகிறீர்கள்
bihi
بِهِۦٓۚ
of it
அதற்கு
ini l-ḥuk'mu
إِنِ ٱلْحُكْمُ
Not (is) the decision
இல்லை/அதிகாரம்
illā
إِلَّا
except
தவிர
lillahi
لِلَّهِۖ
for Allah
அல்லாஹ்வுக்கே
yaquṣṣu
يَقُصُّ
He relates
விவரிக்கிறான்
l-ḥaqa
ٱلْحَقَّۖ
the truth
உண்மையை
wahuwa
وَهُوَ
and He
அவன்
khayru
خَيْرُ
(is the) best
மிக மேலானவன்
l-fāṣilīna
ٱلْفَٰصِلِينَ
(of) the Deciders"
தீர்ப்பாளர்களில்

Transliteration:

Qul innee 'alaa baiyinatim mir Rabbee wa kazzabtum bih; maa 'indee maa tasta'jiloona bih; inil hukmu illaa lillaahi yaqussul haqqa wa Huwa khairul faasileen (QS. al-ʾAnʿām:57)

English Sahih International:

Say, "Indeed, I am on clear evidence from my Lord, and you have denied it. I do not have that for which you are impatient. The decision is only for Allah. He relates the truth, and He is the best of deciders." (QS. Al-An'am, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன். எனினும், அதனை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகின்றீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தையும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகின்றான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௭)

Jan Trust Foundation

பின்னும் நீர் கூறும்| “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கூறுவீராக: "நிச்சயமாக நான் என் இறைவனின் (தெளிவான) ஓர் அத்தாட்சியின் மீதிருக்கிறேன். அவனை (நீங்கள்) பொய்ப்பித்தீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. (எவருக்கும்) அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கே தவிர. (அவன்) உண்மையை விவரிக்கிறான். தீர்ப்பாளர்களில் அவன் மிக மேலானவன்."