Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௪

Qur'an Surah Al-An'am Verse 54

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا جَاۤءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْۤءًاۢ بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ (الأنعام : ٦)

wa-idhā
وَإِذَا
And when
வந்தால்
jāaka
جَآءَكَ
come to you
வந்தால் உம்மிடம்
alladhīna yu'minūna
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
those who believe
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
in Our Verses
நம் வசனங்களை
faqul
فَقُلْ
then say
கூறுவீராக
salāmun
سَلَٰمٌ
"Peace
ஈடேற்றம்
ʿalaykum
عَلَيْكُمْۖ
(be) upon you
உங்களுக்கு
kataba
كَتَبَ
(Has) Prescribed
கடமையாக்கினான்
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
ʿalā
عَلَىٰ
upon
மீது
nafsihi
نَفْسِهِ
Himself
தன்
l-raḥmata
ٱلرَّحْمَةَۖ
the Mercy
கருணையை
annahu
أَنَّهُۥ
that he
நிச்சயமாக
man
مَنْ
who
எவர்
ʿamila
عَمِلَ
does
செய்தார்
minkum
مِنكُمْ
among you
உங்களில்
sūan
سُوٓءًۢا
evil
ஒரு தீமையை
bijahālatin
بِجَهَٰلَةٍ
in ignorance
அறியாமையினால்
thumma
ثُمَّ
then
பிறகு
tāba
تَابَ
repents
(திருந்தி) திரும்பினார்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
from after it
அதன் பின்னர்
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
and reforms
இன்னும் சீர்திருத்தினார்
fa-annahu
فَأَنَّهُۥ
then, indeed He
நிச்சயமாக அவன்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful"
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa izaa jaaa'akal lazeena yu'minoona bi Aayaatinaa faqul salaamun 'alaikum kataba Rabbukum 'alaa nafsihir rahmata annahoo man 'amila minkum sooo'am bijahaalatin summa taaba mim ba'dihee wa aslaha fa annahoo Ghafoorur Raheem (QS. al-ʾAnʿām:54)

English Sahih International:

And when those come to you who believe in Our verses, say, "Peace be upon you. Your Lord has decreed upon Himself mercy: that any of you who does wrong out of ignorance and then repents after that and corrects himself – indeed, He is Forgiving and Merciful." (QS. Al-An'am, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உங்களிடம் வந்தால் (நீங்கள் அவர்களை நோக்கி "ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான்" என்று கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௪)

Jan Trust Foundation

நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவீராக: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! உங்கள் இறைவன் கருணையை தன்மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களில் எவர் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து, பிறகு, அதன் பின்னர் (அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (தன்னை) சீர்திருத்துவாரோ, (அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்."