குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௧
Qur'an Surah Al-An'am Verse 51
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْٓا اِلٰى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِيٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ (الأنعام : ٦)
- wa-andhir
- وَأَنذِرْ
- And warn
- இன்னும் எச்சரிப்பீராக
- bihi
- بِهِ
- with it
- இதன் மூலம்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yakhāfūna
- يَخَافُونَ
- fear
- பயப்படுவார்கள்
- an yuḥ'sharū
- أَن يُحْشَرُوٓا۟
- that they will be gathered
- அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை
- ilā rabbihim
- إِلَىٰ رَبِّهِمْۙ
- to their Lord
- தங்கள் இறைவனிடம்
- laysa
- لَيْسَ
- not
- இல்லை
- lahum
- لَهُم
- for them
- தங்களுக்கு
- min dūnihi
- مِّن دُونِهِۦ
- of other than Him
- அவனைத் தவிர
- waliyyun
- وَلِىٌّ
- any protector
- பாதுகாவலர்
- walā shafīʿun
- وَلَا شَفِيعٌ
- and not any intercessor
- இன்னும் இல்லை/பரிந்துரைப்பவர்
- laʿallahum yattaqūna
- لَّعَلَّهُمْ يَتَّقُونَ
- so that they may (become) righteous
- அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
Transliteration:
Wa anzir bihil lazeena yakhaafoona ai yuhsharooo ilaa Rabbihim laisa lahum min doonihee waliyyunw wa laa shafee'ul la'allahum yattaqoon(QS. al-ʾAnʿām:51)
English Sahih International:
And warn by it [i.e., the Quran] those who fear that they will be gathered before their Lord – for them besides Him will be no protector and no intercessor – that they might become righteous. (QS. Al-An'am, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௧)
Jan Trust Foundation
இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை" என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக! அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகிக் கொள்வதற்காகவும்).