குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௮
Qur'an Surah Al-An'am Verse 38
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا مِنْ دَاۤبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤىِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّآ اُمَمٌ اَمْثَالُكُمْ ۗمَا فَرَّطْنَا فِى الْكِتٰبِ مِنْ شَيْءٍ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ (الأنعام : ٦)
- wamā
- وَمَا
- And not
- இல்லை
- min dābbatin
- مِن دَآبَّةٍ
- [of] any animal
- ஓர் ஊர்வன
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walā ṭāirin
- وَلَا طَٰٓئِرٍ
- and not a bird
- இன்னும் இல்லை/பறவை
- yaṭīru
- يَطِيرُ
- (that) flies
- பறக்கும்
- bijanāḥayhi
- بِجَنَاحَيْهِ
- with its wings
- தன் இரு இறக்கைகள்
- illā
- إِلَّآ
- but
- தவிர
- umamun
- أُمَمٌ
- (are) communities
- படைப்புகளே
- amthālukum
- أَمْثَالُكُمۚ
- like you
- உங்களைப் போன்ற(வர்கள்)
- mā farraṭnā
- مَّا فَرَّطْنَا
- Not We have neglected
- நாம் விடவில்லை
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- in the Book
- புத்தகத்தில்
- min
- مِن
- [of]
- இருந்து
- shayin
- شَىْءٍۚ
- anything
- எதையும்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- ilā rabbihim
- إِلَىٰ رَبِّهِمْ
- to their Lord
- தங்கள் இறைவனிடம்
- yuḥ'sharūna
- يُحْشَرُونَ
- they will be gathered
- ஒன்று திரட்டப்படுவார்கள்
Transliteration:
Wa maa min daaabbatin fil ardi wa laa taaa'iriny yateeru bijanaahaihi illaaa umamun amsaalukum; maa farratnaa fil Kitaabi min shai'in summa ilaa Rabbihim yuhsharoon(QS. al-ʾAnʿām:38)
English Sahih International:
And there is no creature on [or within] the earth or bird that flies with its wings except [that they are] communities like you. We have not neglected in the Register a thing. Then unto their Lord they will be gathered. (QS. Al-An'am, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
பூமியில் ஊர்ந்து திரியக் கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை. (இவைகளில்) ஒன்றையுமே (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர் (ஒரு நாளில்) இவைகளும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௮)
Jan Trust Foundation
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியில் ஊருவதும்; தன் இரு இறக்கைகளால் பறப்பதும் உங்களைப் போன்ற படைப்புகளே தவிர வேறில்லை. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவார்கள்.