Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௦

Qur'an Surah Al-An'am Verse 30

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلٰى رَبِّهِمْ ۗ قَالَ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ ۗقَالُوْا بَلٰى وَرَبِّنَا ۗقَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ࣖ (الأنعام : ٦)

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
And if you (could) see
நீர் பார்த்தால்
idh wuqifū
إِذْ وُقِفُوا۟
when they will be made to stand
போது/ நிறுத்தப்பட்டனர்
ʿalā rabbihim
عَلَىٰ رَبِّهِمْۚ
before their Lord
தங்கள் இறைவனுக்கு முன்
qāla
قَالَ
He (will) say
கூறுவான்
alaysa
أَلَيْسَ
"Is not
இல்லையா?
hādhā
هَٰذَا
this
இது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
the truth?"
உண்மை
qālū
قَالُوا۟
They will say
கூறுவர்
balā
بَلَىٰ
"Yes
ஏனில்லை
warabbinā
وَرَبِّنَاۚ
by our Lord"
எங்கள் இறைவன் சத்தியமாக
qāla
قَالَ
He (will) say
கூறுவான்
fadhūqū
فَذُوقُوا۟
"So taste
ஆகவே சுவையுங்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
வேதனையை
bimā kuntum takfurūna
بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
because you used to disbelieve"
நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால்

Transliteration:

Wa law taraa iz wuqifoo 'alaa Rabbihim; qaala alaisa haazaa bilhaqq; qaaloo balaa wa Rabbinaa; qaala fazooqul 'azaaba bimaa kuntum takfuroon (QS. al-ʾAnʿām:30)

English Sahih International:

If you could but see when they will be made to stand before their Lord. He will say, "Is this not the truth?" They will say, "Yes, by our Lord." He will [then] say, "So taste the punishment for what you used to deny." (QS. Al-An'am, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீங்கள் அவர்களைக்) காண்பீராயின், (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி "விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?" என்று கேட்பான். (அதற்கு) அவர்கள் "எங்கள் இறைவனே! உண்மைதான்" எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ("இதனை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௦)

Jan Trust Foundation

இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்)பார்த்தால்... (அப்போது இறைவன் "விசாரனை நாளாகிய) இது உண்மை இல்லையா?" என்று கூறுவான். அவர்கள், "எங்கள் இறைவன் சத்தியமாக! ஏனில்லை. (உண்மைதான்)" எனக் கூறுவர். "ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையை சுவையுங்கள்" என்று (இறைவன்) கூறுவான்.