Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௮

Qur'an Surah Al-An'am Verse 28

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ ۗوَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ (الأنعام : ٦)

bal
بَلْ
Nay
அல்ல
badā lahum
بَدَا لَهُم
became manifest for them
வெளிப்படும்/ அவர்களுக்கு
mā kānū
مَّا كَانُوا۟
what they used to
எது/இருந்தனர்
yukh'fūna
يُخْفُونَ
conceal
மறைக்கிறார்கள்
min qablu
مِن قَبْلُۖ
from before
முன்னர்
walaw ruddū
وَلَوْ رُدُّوا۟
And if they were sent back
அவர்கள் திருப்பப்பட்டால்
laʿādū
لَعَادُوا۟
certainly they (would) return
மீளுவார்கள்
limā nuhū
لِمَا نُهُوا۟
to what they were forbidden
எதற்கு/ தடுக்கப்பட்டனர்
ʿanhu
عَنْهُ
from it
அதை விட்டு
wa-innahum
وَإِنَّهُمْ
and indeed they
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
certainly are liars
பொய்யர்கள்தான்

Transliteration:

Bal badaa lahum maa kaanoo yukhfoona min qablu wa law ruddoo la'aadoo limaa nuhoo 'anhu wa innahum lakaaziboon (QS. al-ʾAnʿām:28)

English Sahih International:

But what they concealed before has [now] appeared to them. And even if they were returned, they would return to that which they were forbidden; and indeed, they are liars. (QS. Al-An'am, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(இதுவும் அவர்கள் மனமாறக் கூறுவது) அன்று! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௮)

Jan Trust Foundation

எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நிலைமை அவர்கள் எண்ணியது போன்று) அல்ல! முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு வெளிப்படும். அவர்கள் (உலகிற்கு) திருப்பப்பட்டால், அவர்கள் எதைவிட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.