Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௭

Qur'an Surah Al-An'am Verse 27

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ (الأنعام : ٦)

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
And if you (could) see
நீர் பார்த்தால்
idh
إِذْ
when
போது
wuqifū
وُقِفُوا۟
they are made to stand
நிறுத்தப்பட்டனர்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
by the Fire
நரகத்தின் முன்
faqālū
فَقَالُوا۟
then they (will) say
கூறுவார்கள்
yālaytanā nuraddu
يَٰلَيْتَنَا نُرَدُّ
"Oh! Would that we were sent back
நாங்கள் திருப்பப்பட வேண்டுமே
walā nukadhiba
وَلَا نُكَذِّبَ
and not we would deny
பொய்ப்பிக்க மாட்டோமே
biāyāti
بِـَٔايَٰتِ
(the) Signs
வசனங்களை
rabbinā
رَبِّنَا
(of) our Lord
எங்கள் இறைவனின்
wanakūna
وَنَكُونَ
and we would be
இன்னும் ஆகிவிடுவோமே
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
among the believers"
நம்பிக்கையாளர்களில்

Transliteration:

Wa law taraaa iz wauqifoo 'alan Naari faqaaloo yaa laitanaa nuraddu wa laa nukaz ziba bi Aayaati Rabbinaa wa nakoona minal mu'mineen (QS. al-ʾAnʿām:27)

English Sahih International:

If you could but see when they are made to stand before the Fire and will say, "Oh, would that we could be returned [to life on earth] and not deny the signs of our Lord and be among the believers." (QS. Al-An'am, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீங்கள் (அவர்களைப்) பார்த்தால் "நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் படவேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்" என்று அவர்கள் புலம்புவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௭)

Jan Trust Foundation

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால்... “நாங்கள் திருப்(பி அனுப்)பப்பட வேண்டுமே! எங்கள் இறைவனின் வசனங்களை பொய்ப்பிக்க மாட்டோமே; நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே” என்று (அவர்கள்) கூறுவார்கள்.