Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬௦

Qur'an Surah Al-An'am Verse 160

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا ۚوَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ (الأنعام : ٦)

man
مَن
Whoever
எவர்
jāa
جَآءَ
came
செய்தார் (வந்தார்)
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
with a good deed
நன்மையை(க் கொண்டு)
falahu ʿashru
فَلَهُۥ عَشْرُ
then for him (is) ten (times)
அவருக்கு/பத்து
amthālihā
أَمْثَالِهَاۖ
the like of it
அது போன்ற(வை)
waman
وَمَن
And whoever
எவர்
jāa
جَآءَ
came
செய்தார் (வந்தார்)
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
with an evil deed
ஒரு தீமையை(க் கொண்டு)
falā yuj'zā
فَلَا يُجْزَىٰٓ
then not he will be recompensed
கூலி கொடுக்கப்பட மாட்டார்
illā mith'lahā
إِلَّا مِثْلَهَا
except the like of it
தவிர/அது போன்றே
wahum
وَهُمْ
and they
அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
will not (be) wronged
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

man jaaa'a bilhasanati falahoo 'ashru amsaalihaa wa man jaaa'a bissaiyi'ati falaa yujzaaa illaa mislahaa wa hum laa yuzlamoon (QS. al-ʾAnʿām:160)

English Sahih International:

Whoever comes [on the Day of Judgement] with a good deed will have ten times the like thereof [to his credit], and whoever comes with an evil deed will not be recompensed except the like thereof; and they will not be wronged. (QS. Al-An'am, Ayah ௧௬௦)

Abdul Hameed Baqavi:

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதேயன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படமாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬௦)

Jan Trust Foundation

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. எவர் ஒரு தீமையைச் செய்தாரோ அது போன்றே (அதன் அளவே) தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார். (நன்மையைக் குறைத்தோ தீமையைக் கூட்டியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.