குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௪
Qur'an Surah Al-An'am Verse 144
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِۗ قُلْ ءٰۤالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِۗ اَمْ كُنْتُمْ شُهَدَاۤءَ اِذْ وَصّٰىكُمُ اللّٰهُ بِهٰذَاۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ (الأنعام : ٦)
- wamina l-ibili
- وَمِنَ ٱلْإِبِلِ
- And of the camels
- இன்னும் ஒட்டகையிலும்
- ith'nayni
- ٱثْنَيْنِ
- two
- இரண்டை
- wamina l-baqari
- وَمِنَ ٱلْبَقَرِ
- and of the cows
- இன்னும் மாட்டிலும்
- ith'nayni
- ٱثْنَيْنِۗ
- two
- இரண்டை
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- āldhakarayni
- ءَآلذَّكَرَيْنِ
- "(Is it) the two males
- இரு ஆண்களையா?
- ḥarrama
- حَرَّمَ
- He (has) forbidden
- தடை செய்தான்
- ami
- أَمِ
- or
- அல்லது
- l-unthayayni
- ٱلْأُنثَيَيْنِ
- the two females
- இரு பெண்களையா
- ammā
- أَمَّا
- or what
- அல்லது/எவை
- ish'tamalat
- ٱشْتَمَلَتْ
- contains
- சுமந்தன
- ʿalayhi
- عَلَيْهِ
- [in it]
- அவற்றை
- arḥāmu
- أَرْحَامُ
- (the) wombs
- கர்ப்பங்கள்
- l-unthayayni
- ٱلْأُنثَيَيْنِۖ
- (of) the two females?
- இரு பெண்களின்
- am kuntum
- أَمْ كُنتُمْ
- Or were you
- இருந்தீர்களா?
- shuhadāa
- شُهَدَآءَ
- witnesses
- சாட்சிகளாக
- idh waṣṣākumu
- إِذْ وَصَّىٰكُمُ
- when enjoined you
- போது/கட்டளையிட்டான்/உங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bihādhā faman
- بِهَٰذَاۚ فَمَنْ
- with this? Then who
- இதை/யார்
- aẓlamu
- أَظْلَمُ
- (is) more unjust
- மிகப் பெரிய அநியாயக்காரன்
- mimmani
- مِمَّنِ
- than (one) who
- எவனைவிட
- if'tarā
- ٱفْتَرَىٰ
- invents
- இட்டுக்கட்டினான்
- ʿalā
- عَلَى
- against
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- kadhiban
- كَذِبًا
- a lie
- பொய்யை
- liyuḍilla
- لِّيُضِلَّ
- to mislead
- வழி கெடுப்பதற்காக
- l-nāsa
- ٱلنَّاسَ
- the people
- மக்களை
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍۗ
- without knowledge?
- கல்வி இன்றி
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- lā yahdī
- لَا يَهْدِى
- (does) not guide
- நேர்வழி செலுத்த மாட்டான்
- l-qawma
- ٱلْقَوْمَ
- the people"
- மக்களை
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoing"
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Wa minal ibilis naini wa minal baqaris nain; qul 'aaazzakaraini harrama amil unsayaini ammash tamalat 'alaihi arhaamul unsayaini am kuntum shuhadaaa'a iz wassaakumul laahu bihaazaa; faman azlamu mimmanif taraa 'alal laahi kazibal liyuddillan naasa bighari 'ilm; innal laaha laa yahdil qawmaz zaalimeen(QS. al-ʾAnʿām:144)
English Sahih International:
And of the camels, two and of the cattle, two. Say, "Is it the two males He has forbidden or the two females or that which the wombs of the two females contain? Or were you witnesses when Allah charged you with this? Then who is more unjust than one who invents a lie about Allah to mislead the people by [something] other than knowledge? Indeed, Allah does not guide the wrongdoing people." (QS. Al-An'am, Ayah ௧௪௪)
Abdul Hameed Baqavi:
ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரு வகை, பசுவிலும் இரு வகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகின்றீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?" (என்றும் நபியே! நீங்கள் அவர்களைக் கேளுங்கள்.) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, யாதொரு ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௪௪)
Jan Trust Foundation
இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கடடளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரண்டை, மாட்டிலும் (ஆண், பெண்) இரண்டை(ப் படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? இதை அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட போது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? (என்றும் நபியே! கேட்பீராக). கல்வி இன்றி மக்களை வழி கெடுப்பதற்காக பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.