Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௨

Qur'an Surah Al-An'am Verse 142

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ۗ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌۙ (الأنعام : ٦)

wamina l-anʿāmi
وَمِنَ ٱلْأَنْعَٰمِ
And of the cattle
இன்னும் கால்நடைகளில்
ḥamūlatan
حَمُولَةً
(are some for) burden
சுமக்கத் தகுதியானதை
wafarshan
وَفَرْشًاۚ
and (some for) meat
இன்னும் சுமக்கத் தகுதியற்றதை
kulū
كُلُوا۟
Eat
புசியுங்கள்
mimmā
مِمَّا
of what
எவற்றிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
(has been) provided (to) you
உணவளித்தான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
and (do) not follow
இன்னும் பின்பற்றாதீர்கள்
khuṭuwāti
خُطُوَٰتِ
(the) footsteps
அடிச்சுவடுகளை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۚ
(of) Shaitaan
ஷைத்தானின்
innahu
إِنَّهُۥ
Indeed, he
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
(is) to you
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
an enemy
எதிரி
mubīnun
مُّبِينٌ
open
வெளிப்படையான

Transliteration:

Wa minal an'aami hamoolatanw wa farshaa; kuloo mimmaa razaqakumul laahu wa laa tattabi'oo khutuwaatish Shaitaan; innahoo lakum 'aduwwum mubeen (QS. al-ʾAnʿām:142)

English Sahih International:

And of the grazing livestock are carriers [of burdens] and those [too] small. Eat of what Allah has provided for you and do not follow the footsteps of Satan. Indeed, he is to you a clear enemy. (QS. Al-An'am, Ayah ௧௪௨)

Abdul Hameed Baqavi:

(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௪௨)

Jan Trust Foundation

இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் (உற்பத்தி செய்தவன் அவன்தான்). அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றில் இருந்து புசியுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.