Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௭

Qur'an Surah Al-An'am Verse 137

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَتْلَ اَوْلَادِهِمْ شُرَكَاۤؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ (الأنعام : ٦)

wakadhālika
وَكَذَٰلِكَ
And likewise
இவ்வாறே
zayyana
زَيَّنَ
made pleasing
அலங்கரித்தன
likathīrin
لِكَثِيرٍ
to many
அதிகமானோருக்கு
mina l-mush'rikīna
مِّنَ ٱلْمُشْرِكِينَ
of the polytheists
இணைவைப்பவர்களில்
qatla
قَتْلَ
(the) killing
கொல்வதை
awlādihim
أَوْلَٰدِهِمْ
(of) their children
தங்கள்குழந்தைகளை
shurakāuhum
شُرَكَآؤُهُمْ
their partners
அவர்களுடைய ஷைத்தான்கள்
liyur'dūhum
لِيُرْدُوهُمْ
so that they may ruin them
அழிப்பதற்காக/அவர்களை
waliyalbisū
وَلِيَلْبِسُوا۟
and that they make confusing
குழப்புவதற்காக
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
dīnahum walaw shāa
دِينَهُمْۖ وَلَوْ شَآءَ
their religion And if (had) willed
அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mā faʿalūhu
مَا فَعَلُوهُۖ
not (would) they have done so
அவர்கள் செய்யவில்லை/அதை
fadharhum
فَذَرْهُمْ
So leave them
விடுங்கள்/அவர்களை
wamā yaftarūna
وَمَا يَفْتَرُونَ
and what they invent
உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்

Transliteration:

Wa kazaalika zaiyana likaseerim minal mushrikeena qatla awlaadihim shurakaaa'uhum liyurdoohum wa liyalbisoo 'alaihim deenahum wa law shaaa'al laahu maa fa'aloohu fazarhum wa maa yaftaroon (QS. al-ʾAnʿām:137)

English Sahih International:

And likewise, to many of the polytheists their partners have made [to seem] pleasing the killing of their children in order to bring about their destruction and to cover them with confusion in their religion. And if Allah had willed, they would not have done so. So leave them and that which they invent. (QS. Al-An'am, Ayah ௧௩௭)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௭)

Jan Trust Foundation

இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வழிபாட்டை குழப்புவதற்காகவும் தங்கள் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் இட்டுக்கட்டுவதுடன் (விட்டு) விடுங்கள்.