குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௮
Qur'an Surah Al-An'am Verse 128
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًاۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ ۚوَقَالَ اَوْلِيَاۤؤُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَآ اَجَلَنَا الَّذِيْٓ اَجَّلْتَ لَنَا ۗقَالَ النَّارُ مَثْوٰىكُمْ خٰلِدِيْنَ فِيْهَآ اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗاِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ (الأنعام : ٦)
- wayawma
- وَيَوْمَ
- And (the) Day
- நாள்
- yaḥshuruhum
- يَحْشُرُهُمْ
- He will gather them
- ஒன்று சேர்ப்பான் அவர்கள்
- jamīʿan
- جَمِيعًا
- all
- அனைவரையும்
- yāmaʿshara
- يَٰمَعْشَرَ
- (and will say) O assembly
- கூட்டமே
- l-jini
- ٱلْجِنِّ
- (of) [the] jinn!
- ஜின்களின்
- qadi is'takthartum
- قَدِ ٱسْتَكْثَرْتُم
- Certainly you have (misled) many
- அதிகப்படுத்தி விட்டீர்கள்
- mina l-insi
- مِّنَ ٱلْإِنسِۖ
- of the mankind"
- மனிதர்களில்
- waqāla
- وَقَالَ
- And will say
- இன்னும் கூறுவார்(கள்)
- awliyāuhum
- أَوْلِيَآؤُهُم
- their friends
- அவர்களின் நண்பர்கள்
- mina l-insi
- مِّنَ ٱلْإِنسِ
- among the men
- மனிதர்களில்
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord
- எங்கள் இறைவா
- is'tamtaʿa
- ٱسْتَمْتَعَ
- profited
- பயனடைந்தனர்
- baʿḍunā
- بَعْضُنَا
- some of us
- எங்களில் சிலர்
- bibaʿḍin
- بِبَعْضٍ
- by others
- சிலரைக்கொண்டு
- wabalaghnā
- وَبَلَغْنَآ
- and we have reached
- இன்னும் அடைந்தோம்
- ajalanā
- أَجَلَنَا
- our term
- தவணை/எங்கள்
- alladhī
- ٱلَّذِىٓ
- which
- எதை
- ajjalta
- أَجَّلْتَ
- You appointed
- நீ தவணையளித்த
- lanā
- لَنَاۚ
- for us"
- எங்களுக்கு
- qāla
- قَالَ
- He will say
- கூறுவான்
- l-nāru
- ٱلنَّارُ
- "The Fire
- நரகம்தான்
- mathwākum
- مَثْوَىٰكُمْ
- (is) your abode
- தங்குமிடம்/உங்கள்
- khālidīna
- خَٰلِدِينَ
- will abide forever
- நிரந்தரமானவர்களாக
- fīhā
- فِيهَآ
- in it
- அதில்
- illā
- إِلَّا
- except
- தவிர
- mā shāa l-lahu
- مَا شَآءَ ٱللَّهُۗ
- (for) what wills Allah
- அல்லாஹ் நாடினால்
- inna rabbaka
- إِنَّ رَبَّكَ
- Indeed your Lord
- நிச்சயமாக உம் இறைவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- (is) All-Wise
- ஞானவான்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- நன்கறிந்தவன்
Transliteration:
Wa yamwa yahshuruhum jamee'ai yaa ma'sharal jinni qadistaksartum minal insi wa qaala awliyaaa'uhy minal insi Rabbanas tamta'a ba'dunaa biba'dinw wa balaghnaaa ajalannal lazeee ajjalta lanaa; qaalan Naaru maswaakum khaalideena feehaaa illaa maa shaaa'allaah; inna Rabbaka Hakeemun 'Aleem(QS. al-ʾAnʿām:128)
English Sahih International:
And [mention, O Muhammad], the Day when He will gather them together [and say], "O company of jinn, you have [misled] many of mankind." And their allies among mankind will say, "Our Lord, some of us made use of others, and we have [now] reached our term which You appointed for us." He will say, "The Fire is your residence, wherein you will abide eternally, except for what Allah wills. Indeed, your Lord is Wise and Knowing." (QS. Al-An'am, Ayah ௧௨௮)
Abdul Hameed Baqavi:
(இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) "ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)" என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)" என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) "நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்" என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், மிக்க ஞானமுடையவனும் நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௮)
Jan Trust Foundation
அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்| “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் நாளில், (ஜின்களை நோக்கி) "ஜின்களின் கூட்டமே! நீங்கள் மனிதர்களில் (வழிகேடர்களை) அதிகப்படுத்தி விட்டீர்கள்" (என்று கூறுவான்). மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பயனடைந்தனர். எங்களுக்கு நீ தவணையளித்த தவணையை அடைந்தோம். (எங்களுக்கு தங்குமிடம் எது?)" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன்) "நரகம்தான் உங்கள் தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமானவர்கள், அல்லாஹ் நாடினால் தவிர." என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், ஞானவான், நன்கறிந்தவன்.