Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௫

Qur'an Surah Al-An'am Verse 115

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلًاۗ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۚوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (الأنعام : ٦)

watammat
وَتَمَّتْ
And (has been) fulfilled
முழுமையாகியது
kalimatu
كَلِمَتُ
(the) word
வாக்கு
rabbika
رَبِّكَ
(of) your Lord
உம் இறைவனின்
ṣid'qan
صِدْقًا
(in) truth
உண்மையால்
waʿadlan
وَعَدْلًاۚ
and justice
இன்னும் நீதத்தால்
lā mubaddila
لَّا مُبَدِّلَ
No one can change
அறவே இல்லை/மாற்றுபவன்
likalimātihi
لِكَلِمَٰتِهِۦۚ
His words
அவனுடைய வாக்குகளை
wahuwa
وَهُوَ
and He
அவன்
l-samīʿu
ٱلسَّمِيعُ
(is) the All-Hearer
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa tammat Kalimatu Rabbika sidqanw wa 'adlaa; laa mubaddila li Kalimaatih; wa Huwas Samee'ul 'Aleem (QS. al-ʾAnʿām:115)

English Sahih International:

And the word of your Lord has been fulfilled in truth and in justice. None can alter His words, and He is the Hearing, the Knowing. (QS. Al-An'am, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (யாவையும்) செவியுறுபவ னாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம் இறைவனின் வாக்கு உண்மையாலும் நீதத்தாலும் முழுமையாகியது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் அறவே இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.