குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௮
Qur'an Surah Al-An'am Verse 108
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍۗ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْۖ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (الأنعام : ٦)
- walā tasubbū
- وَلَا تَسُبُّوا۟
- And (do) not insult
- திட்டாதீர்கள்
- alladhīna yadʿūna
- ٱلَّذِينَ يَدْعُونَ
- those whom they invoke
- எவர்களை/வணங்குகிறார்கள்
- min dūni
- مِن دُونِ
- from other than
- அன்றி
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வை
- fayasubbū
- فَيَسُبُّوا۟
- lest they insult
- அதனால் திட்டுவார்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- ʿadwan
- عَدْوًۢا
- (in) enmity
- வரம்பு மீறி
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍۗ
- without knowledge
- அறிவின்றி
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறே
- zayyannā
- زَيَّنَّا
- We have made fair-seeming
- அலங்கரித்தோம்
- likulli
- لِكُلِّ
- to every
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- community
- வகுப்பினர்
- ʿamalahum
- عَمَلَهُمْ
- their deed
- அவர்களுடைய செயல்களை
- thumma ilā rabbihim
- ثُمَّ إِلَىٰ رَبِّهِم
- Then to their Lord
- அவர்களுடைய இறைவனிடமே
- marjiʿuhum
- مَّرْجِعُهُمْ
- (is) their return
- மீட்சி/அவர்களுடைய
- fayunabbi-uhum
- فَيُنَبِّئُهُم
- then He will inform them
- ஆகவே அறிவிப்பான்/அவர்களுக்கு
- bimā kānū yaʿmalūna
- بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
- about what they used to do
- எதை/இருந்தார்கள்/செய்வார்கள்
Transliteration:
Wa laa tasubbul lazeena yad'oona min doonil laahi fa yasubbul laaha 'adwam bighairi 'ilm; kazaalika zaiyannaa likulli ummatin 'amalahum summa ilaa Rabbihim marji'uhum fa yunabbi'uhum bimaa kaanooya'maloon(QS. al-ʾAnʿām:108)
English Sahih International:
And do not insult those they invoke other than Allah, lest they insult Allah in enmity without knowledge. Thus We have made pleasing to every community their deeds. Then to their Lord is their return, and He will inform them about what they used to do. (QS. Al-An'am, Ayah ௧௦௮)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௮)
Jan Trust Foundation
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை அன்றி எவர்களை அவர்கள் வணங்குகிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறிவின்றி வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே, ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயல்களை நாம் அலங்கரித்தோம். பிறகு, அவர்களுடைய இறைவனிடமே அவர்களுடைய மீட்சி இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) அவர்களுக்கு அறிவிப்பான்.